பரவிப் பணிந்து, பலபெரி யோர்பாடல் பாடிநின்று விரவிய தொண்ட ருடன் பயின் றன்னவர் மேன்மையினைக் கரவறி யாத உளத்தினைக் கண்டவர் காலில்விழுந் துரம்பெற வேஅருள் ; ரத்ன கிரிஉறை உத்தமனே. (78)
உத்தமன், அத்தன், உடையான் அடியே உளம்நினைந்து மத்த மனத்தொடு மால் இவன் என்ன வகுத்திடுவாய் ; சத்தம் மிகுத்த புகழ்ரத்ன வெற்புறை சற்குணனே, பத்தன் எனும்படி நின்னை வணங்கருள் பாலிப்பையே. (79)
பால்என் பதுமொழி ; பஞ்சென் பதுகால் : பதுமமலர்க் கோலம் முகம்என் றரிவையர் காமத்தைக் கொண்டுநின்றேன் ; சீலம் பெறுவோர் புகழ்ரத்ன வெற்புறை தேவ, நினை ஏலும் படிபுகழ்ந் தேத்துதற் கோர்சொல் இயம்புவையே. (30)
இயம்பல ஓசை முழங்கும்நின் கோயி லினை அணுகி நயம்பெற நின்னை வணங்கி உயும்வகை நல்கிடுவாய் ; பயம்இலார் போற்றும் இரத்தின வெற்புறை பண்னவனே, சயம்பெறும் வேலவ, ஞானத் திருஉருச் சார்பவனே. (81)
சார்ந்துநின் பாதம் பணிவதல் லாமல் தகைஒன்றிலே ; ஆர்ந்தநின் தொண்டர் அடிபணிந் தவ்வியல் பாரஅருள் ; தேர்ந்த அறிவினர் போற்றும் இரத்னத் திருமலையாய் ஒர்ந்திந்த நல்நிலை யான்பெறும் ஆற்றை உரைத்தருளே. (82)
உரைத்துப்பொன் மாற்றை உணர்பவர் வல்லவர் ; உன்புகழை உரைத்துப் பணிந்திடின் எற்கொரு மாற்றிங் குயர்ந்திடுமே ; கரைத்தநற் சந்தனம் ஆடிக் களிப்புறும் காவலனே, விரைக்கடம் பைஅணி தோளினய், ரத்தின வெற்பவனே. (83)
பவன்எம் பிரான், விண் ணவர்பணி வோன், கங்கை பாய் சடையான், சிவன்தரு பால, இரத்தின வெற்புறை தேவ, அருள் : பவன்எம் பிரான்உனைப் போற்றிப் பணியப் பணித்தருள்வாய் : இவன்எவன் என்று பராமுக மாய்விடின் என்செய்வனே ? (84)
செய்யவன் நன்மேனி செய்யவேற் கையன் சிறுமிவள்ளித் தையலைக் கண்டன்புளம் கொண்டு தங்கன்பினல் நையல்இல் லாத களவுப் புணர்ச்சியை நாடியவன், கொய்மலர் கொண்டடி யார்துதி ரத்தினக் குன்றவனே. (85)
18