இறையவ னே, அரு ளின்மலை யே, எழில் ஏற்றம்உளாய், மறையவ னே, ரத்ன வெற்புறை பால, மணம்கமழும் நிறைகடப் பந்தார் அணிபவ னே, என்றும் நின்மலனே, உறைதயி ரைக்கடை மத்தென நின்றேன் : உயச்செய்வையே. (94)
செய்வதொன் றின்ன தெனஅறி யேன் நின் திருவடியை உய்வதை எண்ணி வணங்கிலன் துர்த்தர் உறவுகொண்டேன் : பெய்வது போல அருள்தரு வாயோ ? பிறப்பிலனே, செய்நலம் உள்ள இரத்தின வெற்புறை சேவகனே. (95)
சேவக னே, முப் புரம்எரித் தான்தரு சேயவனே, ஏவல் இடம்பொருள் ஒன்றும் இலாதஇவ் வேழையின்பால் நீவல் அருள்செயின் மாசொன் றுணக்கு நிலவுறுமோ ? பாவம்எல் லாம்தீர்க்கும் ரத்ன கிரியுறை பண்ணவனே. (96)
பண்ணவ னே, ஆனவ னே, பரப் பானவனே, விண்ணவர் ஏத்தித் தமது பதவியை வேட்டுநிற்கும் கண்ணவ னே, ரத்ன வெற்புறை பால, கணங்கள் புகழ் எண்ணவ னே, எழுத் தானவ னே, எம் இறையவனே. (97)
இறைஅள வேனும் அறிவிலாப் பாவி யினுக்கருளின் நிறைதரும் நின்அருட் காசு வருமோ ? நினைஅன்றிநான் குறைஅற யாரிடம் செல்குவன் ? ரத்தினக் கோவெற்பினய், நறைநிறை யும்கடப் பந்தாரி ய்ை, எங்கள் நாயகனே. (98)
நாய்அஆன யேன்எச்சில் நச்சிஉண் பேன், இனி நன்மை உண்டோ ? தாய்அனே யாய் அருட் பால முருகா, தனிஇரத்ன மாய கிரியில் எழுந்தருள் வாய்என் அலல்களைவாய் , போய பிழைகள் பொறுத்தருள் வாய் , எங்கள் புங்கவனே. (99)
புங்கவன், ஈசன், உனக்கருள் செய்வனே ? போக்கிலேகாண் ; இங்கிரு நீசக் குணத்துடன் என்றென ஏசுவையோ? எங்கினிப் போகுவன் ? எவ்வாறு நன்னலம் எய்துவன்யான்? பொங்கிய நற்புகழ் ரத்ன கிரியுறை போதகனே. (100)
போதனை செய்து, மிகப்பாவி என்னைப் புகல்பெற்றுநற் சாதனை செய்யப் பழக்குவார்க் கண்டிலன் , தாலம்இதில் வேதனை யைக்கொண்டு வீணே அழிதல் விதிகொல்? ரத்ன மாதலம் மேவிய பால முருக, நன் மாதவனே. (101)
20