மாதவம் செய்ய வழிஅறி. யேன் மையல் மண்டிஇன்பம் மாதர்கள் ஈவார் எனஎண்ணி வாழ்ந்திடும் வாழ்க்கைவிட்டுப் பூதலம் போற்றும் இரத்தின வெற்புறை புண்ணியனே, நீத முடன்நினை வாழ்த்தி வணங்க நினைத்தருளே. (102)
நினைத்தொறும் காண்தொறும் பேசும் தொறும்இன்பம் நேரும்எனும் வினைத்தொகை போக்கிய மாணிக்க வாசகர் மெய்யுரையை எனைத்துணை யேனும் அறிந்திலன்; ஏழையேன் என் செய்குவேன் ? அனைத்துனே யாம்ரத்ன வெற்புறை பால, அருளுவையே. (103)
அருளின் திறம்அறி யேன் ; அதை எய்திடும் ஆறறியேன் , தெருளும் திறம் இலேன் நின்னுடை ரத்னத் திருமலையில் உருளும் ஒருகல்லாய் ஆவதற் கேனும் உணதருள்செய் இருளும் மனம் இலார் போற்றிய தேவ, இறையவனே. (104)
திண்னிதின் நற்குகன் திருவடி வீழ்ந்து எழுந்து பணிந் தண்ணிய நலம்பெறும் அன்பர்க்கு நல்லருள் அளித்திடுவான் ; பண்ணிய பாவங்கள் போக்கிடு வான் ; பலர் பால்அன்பினை எண்ணுறச் செய்குவன் ரத்ன கிரியுறை இறையவனே. (105)
இறையவ வாழி ! நின்அருள் வாழி ! இனிது பணிந் துறைதொண்டர் வாழி ! நல் அறம் வாழி : உலகில்நல்லோர் நிறைவுற வாழி : இரத்தின வெற்புறை நின்அருளும் குறைவற வாழி கொழுந்திரு வோடு குறைவறவே. (106)
பயன்
இரத்தின வெற்புறை எம்மான் முருகன் விரித்த புகழ் சற்றே விளம்பித் - தரித்திட்ட இந்தநூல் ஒதுவார் இன்புறுக எந்நாளும் பந்தம் அற நிற்க பரிந்து.
21