பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும் பதவுரை

திருமகள் - இலக்குமியை, மார்பன் - தன்னுடைய திருமார்பில் வைத்த திருமாலினுடைய, மருகன் - தங்கையாகிய உமாதேவியின் திருமகன். அழகன் - என்றும் மாறாத அழகை உடையவன்; 'என்றும் அழகியாய்" என்று பிறர் கூறுவதை உணர்க. திறல் உடையான் - பகைவர்களை அழிக்கும் ஆற்றலை உடையவன். அருள் மிகுகின்ற - திருவருள் மிகுதியாக இருக்கின்ற; இது பெருமானுக்கு அடை இரத்தின நற்கிரி - நல்ல இரத்தினகிரியில். ஆர் - எழுந்தருளியுள்ள. பெருமான் - பாலமுருகன். மருவும் - தன்னை அணையும். குறமகள் - வள்ளியினுடைய நோக்கிற்கு - கடைக்கண் பர்வையைப் பெறுவதற்கு அலந்து - மனம் கலங்கி. வருந்தியவன் - வருத்தத்தை அடைந்தவன். குரு எனும் - அகத்திய முனிவர், சிவபெருமான், அருணகிரிநாதர் முதலியவர்களுக்கு உபதேசம் செய்த குரு என்று சொல்லும், பால முருகன் - இரத்தினகிரியில் எழுந்தருளியுள்ள பாலமுருகனுடைய திருவடி - அழகிய பாதங்கள். கூர்துணை - அடியேனுக்கு மிக்க பாதுகாப்பாக உள்ளவை.

துணையும் - அடியேனுக்குத் துணையாக இருப்பவனும், தொழும் தெய்வமும் - அடியேன் வணங்கும் கடவுளும். பெற்ற தாயுடன் - அடியேனைப் பெற்றெடுத்த தாயினுடனே சுற்றமும் ஆய் - உறவினர்களும் ஆகி. இணையும் - பொருந்தி உள்ள குமரன் - குமாரக் கடவுள். இரத்தின நற் கிரி - நல்ல இரத்தின கிரியில், ஏய்ந்த - எழுந்தருளியுள்ள குகன் - தகராலயம் என்னும் குகையில் இருப்பவன். பனை எனும் - மூங்கில் என்று சொல்லும்படி அமைந்திருக்கும். தோள் உடை - தோள்களை உடைய, வள்ளி - வள்ளியெம் பெருமாட்டி அணைந்த - தழுவிய. பரம்பரனை - மேலானஉள்ளவனை. அணைந்து - அவனுடைய சன்னதியை அடைந்து வணங்குவார் - பணிகின்ற மனிதர்கள். எந்நாளும் - எந்தக்காலத்திலும். அச்சம் - எதலுைம் உண்டாகும் பயம். அகன்றவர் - நீங்கியர்.

ஏதும் - எந்தப் பொருளும். இணைஇலா - ஒப்பு இல்லாத. வீரம் - பகைவர்களை அழிக்கும் வீரத்தை. உடையவன் - பெற்றவன். எண்ணமதில் - தம்முடைய எண்ணத்தில்; அது பகுதிப் பொருள் விகுதி. கோது - குற்றம், சிறிதும் - சிறிதளவேனும், இலாதவர் - இல்லாத பெரியவர்கள். போற்ற - வாழ்த்தி வணங்க, குதுகலிப்பான் - அதனால் மகிழ்ச்சியை அடைவான். வாது இல - தருக்கம் சிறிதும் இல்லாத இந்த மலை சிறந்ததோ, அல்லவோ என்று தருக்கம் செய்வதைச் சொன்னபடி இரத்தின மா மலைப்பால் - பெருமையை உடைய இரத்தின கிரியில். என்றும் -

22