பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 1,

12.

13.

பாலமுருகன். களம்பெறும் - விசாலமான இடத்தை உடைய, ரத்தின நற்கிரி - நல்ல இரத்தினகிரியில். மேவிய - எழுந்தருளியுள்ள கார்மயிலோன் - மேகத்தைக் கண்டு களிக்கும் மயில் வாகனத்தை உடைய பாலமுருகனுடைய தளம்பெறும் - தாமரை இதழைப் போன்றுள்ள. சேவடி - சிவப்பு நிறத்தை உடைய திருவடிகளை போற்றி - வணங்கி, துதித்தால் - துதிகளைச் சொன்னல். அதுவே தவம் - அந்தச் செயலே தவமாகும்.

தவம் செய - தவத்தைப் புரிவதற்கு என்று - என எண்ணி - நினைந்து, கானகம் தேடி - காடுகளைத் தேடி தழையை உண்டு - உதிர்ந்த தழைகளைத் தின்று. பவமதை - பிறப்பை பாவத்தை எனலும் ஆம். அது பகுதிப் பொருள் விகுதி. நீக்கல் - போக்கிவிடுதல். மிக எளிதோ - மிகவும் சுலபமான காரியமோ ? அருட்பா வலவன் - முருகனுடைய அருளைப் பெற்ற கவிஞகிைய, சிவம் ஆர் - மங்கலம் நிறைந்த அருணகிரிநாதன் - திருப்புகழ் முதலியவற்றைப் பாடியருளிய அருணகிரிநாதர். போற்றிய - வணங்கிய, சேய் - பால முருகனுடைய அடியை - திருவடிகளை. குவலயம் - உலகத்தில் வாழும் மக்கள். போற்றும் - வாழ்த்தி வணங்கும். இரத்தின நற்கிரி - நல்ல இரத்தின கிரியை, கூடுக - அடைந்து பால முருகனை வணங்குங்கள்.

வேதனை - பிரம தேவனை. குட்டி - தன்னை மதியாமல் இருந்ததனால் அவனுடைய தலையில் குட்டி, சிறை இட்ட- சிறையில் தள்ளிய. வேலன் - முருகக் கடவுள். விரும்புபவர் - விரும்புகின்ற மக்கள். வேதனை - துன்பங்களை நீக்கி - போகச் செய்து. பிறப்பு அறுப்பான் - இனிமேல் பிறத்தலைப் போக்கும் பொருட்டு, ரத்னவிற் கிரியில் - ஒளியை உடைய இரத்தின கிரியில் எழுந்தருளியுள்ள. நாதனை - பாலமுருகனை. போற்றி - வாழ்த்தி. வணங்குமின் - பணியுங்கள். என்றும் - எக்காலத்திலும். நலம் - பலவகை நன்மைகளை. பெறலாம் - அடையலாம். சீதள வாரி சபாதனை - குளிர்ந்த தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளை உடைய பாலமுருகனை. போற்றி - வாழ்த்தி வணங்கி, திகழுமின் -

விளங்குங்கள்.

மின் இடை - மின்னலைப் போன்ற சிறிய இடுப்பை உடைய, மாதர் - பெண்களுடைய. மயக்கினில் - காம மயக்கத்தில், வீழ்ந்து - அழுந்தி. விழற்கு - விழல் என்னும் கொடிக்கு ; அது ஒன்றுக்கும் பயன்படாத செடி, இறைத்த - பாய்ச்சிய, நல் நிற நீர் என்ன - நல்ல நிறத்தை உடைய தண்ணிரைப் போல. வானளை - நாம் வாழ்ந்திருக்கும் காலத்தை. வீண் ஆக்கி - வீணே போகும்படி செய்து. நாசம் உற - நாசங்கள் நம்மை வந்து அடையும்படி.

25