26.
27,
28.
29,
வீடு - முத்தி. பார்த்தது - அறிந்தது. அன்று. ஏ இரண்டும் அடைநிலைகள்.
பார்த்து - தரிசனம் செய்து பணிமின் - வணங்குங்கள். அடியிணை -இரண்டு திருவடிகளில், வீழ்ந்து-சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்து. பரவுமின்கள் - தோத்திரம் செய்யுங்கள். வேர்த்து - வேர்வை உண்டாகி. இது அன்பு மிகுதியால் உண்டாவது விழைவு-விருப்பம். ஆர்த்து - பலவற்றை வெளிப்படையாகச் சொல்லி. புகழ்மின் - துதியுங்கள். அவன் - பாலமுருகன். இங்கு - இவ்வுலகத்தில். ஈர்க்கின்ற - இழுக்கின்ற, பாசம் - பற்று. அண்ட ஒட்டாது - அணுகச் செய்யாது. தொண்டதே தொண்டாவது. இது இச்செயல்.
தொண்டர் - பக்தர்கள். கண்டு - தரிசித்து. அண்டி - அணுகி. உண்டிருக்கும் - அனுபவிக்கும். சுத்த ஞானம் - பரஞானம். தண்டை - காலில் அணியும் ஆபரணம். அம் - அழகிய புண்டரிகம் - தாமரை மலரைப்போன்ற திருவடிகளை தாழ் - தங்கும். அண்டிய - எழுந்தருளிய, அனுதினமும் - தினந்தோறும். அலர் - மொய்க்கும். குழலாள் - கூந்தலையுடையவள். இந்தப் பாட்டு, 'தொண்டர்கள் டண்டிமொண் டுண்டிருக் கும்சுத்த ஞானமெனும், தண்டையம் புண்டரி சுந்தரு வாய்சண்ட தண்டவெம்சூர், மண்டலம் கொண்டுபண்டண்டரண்டங்கொண்டு மண்டிமிண்டக் கண்டுருண் டண்டர்வின் டோடாமல் வேல்தொட்ட காவலனே' (கந்தர் அலங்காரம்) என்பதை அடியொற்றியது.
வணங்கி - பாலமுருகன் திருவடியை வணங்கி, துதிக்க - தோத்திரம் செய்ய இணங்கி - சேர்ந்து. குணம் - நல்ல பண்புகள். துட்டன் - கெட்டவன். ஈடேற்றுவாய் - கரையேற்றுவாய், குன்று - மலை, கமழ் - வாசனை வீசும். மா- பெருமையை உடைய, நிணம் - ஊன். கக்கும் - வெளிப்படுத்தும் ; இந்தப் பாட்டு, 'வணங்கித் துதிக்க அறியா மனித ருடனினங்கிக், குணங்கெட்ட துட்டனை ஈடேற்று வாய்கொடியும்கழுகும், பிணங்கத் துணங்கை அலகைகொண்டாடப் பிசிதர்தம்வாய், நிணம்கக்க விக்ரம வேலாயுதந்தொட்ட நிர்மலனே' (கந்தர் அலங்காரம்) என்பதை அடியொற்றியது.
நினைந்தும் - தியானித்தும். புகழ்ந்தும் - முருகன் புகழ்களைச் சொல்லியும். அன்றி - அல்லாமல், ஏ அசை நிலை, கணைந்து - மிகுதியாக, கார் மலையில் - மேகம் தங்கும் பால முருகனுடைய இரத்தின கிரியில், முனைந்த - முனையை உடைய. வை - கூர்மை, நிற்கின்ற - எழுந்தருளியிருக்கும். இணைந்திடும் - வருத்த மடையும். போது - காலத்தில் தருவை - கொடுப்பாய் இந்தப் பாட்டு, “நின்றும் இருந்தும் கிடந்தும் நினைப்பதுன்னை, என்றும் வணங்குவது
29