உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O.

31.

32.

நின்மலர்த் தாள் எழுதாமறையின், ஒன்றும் அரும்பொரு ளேஅரு ளே உறவே இமயத்தன்றும் பிறந்தவளேஅழியாமுத்தி ஆனந்தமே." (அபிராமி அந்தாதி, 10) என்பதை அடியொற்றியது.

எய்துக என்றே - கொள்கை என்று ஏ அசைநிலை. ஒதாத - சொல்லாத நல்லோர்கள் - சான்றோர்கள். ஊற்றம் - வலிமை. பாதாதிகேசம் - பாதம் முதல் தலை வரையில். படைத்தனன் - கொண்டிருந்தேன். சொல்லல் - உன் புகழைச் சொல்லுதல். எளிது

— ðr6\) t_J Lf).

எளிது அன்று - சுலபம் அல்ல. மானிடராய் - மனிதராய். இதனை - மனிதராய்ப் பிறத்தல் அரிது என்பதை "அரிதரிது மானிடர் ஆதல் அரிது' என்பது ஒளவையார் பாடல். “பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும்நின் சிற்றடியைக், குறுகிப் பணியப் பெறக் கற்றிலேன்' என்பது கந்தர் அலங்காரம். அளி துன்ற - அன்பு பொருந்த, கடன் - கடமை, களி துன்ற - மகிழ்ச்சி நிறைய. பால - பாலமுருகனே. துளி வந்த - நீர்த்துளி வந்த துதிக்கும் - தோத்திரம் செய்யும், துணிவு - உறுதி, அன்பர்களுக்கு - அன்பினால் கண்ணிர் வழியும் பக்தர்களுக்கு இது, "பேரானந்தம் உற்றவர்க்கே கண்ணிகம் பலைஉண் டாகும்" (தாயுமானவர் பாடல்) என்பதை எண்ணிப் பாடியது , “உடல்குழைய என்பெலாம் நெக்குருக விழிநீர்கள் ஊற்றென வெதும்பி ஊற்ற" (தாயுமானவர் பாடல்) என்பதும் இக் கருத்தை வலியுறுத்தும்.

துன்னியவர் - இருந்தவர்கள். தணிவரும் - தணிக்க முடியாத, உடை - உடைய, காலன் - யமன். தயங்குவர் - வருந்துவர். (உலகவழக்குச் சொல்). அணி - அழகு. அகம் - மனம். நனி - நண்ணி , அணுகி (இடைக்குறை). "சூலம் பிடித்தெம பாசம் சுழற்றித் தொடர்ந்துவரும், காலன் தனக்கொரு காலும்அஞ் சேன்கடல் மீதெழுந்த, ஆலம் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன், வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே", "பட்டிக் கடாவில் வரும்.அந்த காலனைப் பார்அறிய, வெட்டிப் புறங்கண் டலாதுவி டேன்வெய்ய சூரனைப்போய், முட்டிப் பொருதசெவ் வேற்பெரு மாள்திரு முன்புநின்றேன், கட்டிப் புறப்பட டாசக்தி வாளென்றன் கையதுவே" என்னும் கந்தர் அலங்காரப் பாடல்களும் இந்தக் கருத்தை வலியுறுத்தும், 'மரணப்ர மாதம் நமக்கில்லை யாம்என்றும் வாய்த்துணை, கிரணக் கலாபியும் வேலும் உண் டெகிண் கிணி.முகுளச் சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரட்சா, பரண

க்ருபாகர ஞானாகரசுர பாஸ்கரனே' என்பதும் அந்த நூலில் வருவது.

30