பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33.

34.

35.

36.

நடுங்கும் - நடுங்குவாள். வருந்தும் - வருந்துவாள். நாயகன் - காதலன். நண்ணிலன் - வரவில்லை. அடங்கும் - அடங்கியிருப்பாள். ஒடுங்கும் - ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடப்பாள். ஆயிழை - இந்தப் பெண். ஆர்ந்து - நிறைந்து வந்து - எழுந்தருளி. மடங்குதல் - செயலொழிந்திருப்பதை மா - பெருமையை உடைய, கடம் கவிழ் - மதத்தை ஒழுக விடும். என - என்று சொல்லும்படி, நின்ற எழுந்தருளிய, காருண்யனே - கருணையை உடையவனே. இது தலைவியின் நிலையைக் கண்டு தோழி கூறிய கூற்று.

நீர் உண்டு வீழ நீர் பெருகி விழ அன்பர்களின் இந்த இயல்பை முன்பும் கண்டோம். நெடுநிலம் - நீண்ட தரையில், நிதம் - தினந்தோறும். சீர் - சிறப்பு. மித்திரர் - நண்பர்கள். வளம் - வளப்பம். பேர் உண்ட - புகழ் பெற்ற நல்லவர் - சான்றோர்கள். ஆசிகள் - ஆசீர்வாதங்கள். -

உண்டுண் டுடு டுடு டுண்டென : அனுகரண ஓசை "கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை, மொண்டுண் டயர்கினும் வேல்மற வேன்முது கூளித்திரள், டுண்டுண் டுடுடுடு டுே டுடு டுடு டுண்டுடுண்டென் றண்டர்விண் டோடாமல் வேல்தொட்ட காலவனே' என்பது கந்தர் அலங்காரம். பேரி - பேரிகை. தண்டத்தலைவர் - சேனாபதிகள். சூரன் - சூரபத்மன். தாக்கி - போரிட்டு. அவன் - சூரபத்மன். படையை - சேனையை. குலைத்தவன் - அழித்தவன். குலம் - மேன்மை. வரை - மலை. அண்டும் - எழுந்தருளியிருக்கும். பெருமான் - கடவுள்.

தாய் குறை சொல்ல - பெற்றெடுத்த தாய் தம் குறைகளை எடுத்துச் சொல்ல. தமர் குறை சொல்ல - பந்துக்கள் குறைகளைச் சொல்ல. தனிமையினால் - கணவனைப் பிரிந்து தனியாக இருப்பதனால். நோய் பெற்று - பிரிவுத் துன்பத்தை அடைந்து. வாடும் - வாட்டத்தை அடையும். இந் நேரிழைக்கு - இந்தப் பெண்ணுக்கு. உன் - தேவரீருடைய. அருள் நோக்கு - கருணைப் பார்வையை, உதவுவாய் - கொடுப்பாய். வாய் பெற்றதால் - மனிதர்கள் வாயைப் பெற்றதனால், பயன் - பிரயோசனம், நின்னை வழுத்துதல் - தேவரீரை வாழ்த்துதல் : “வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை' எனப் பிறரும் கூறுதல் காண்க. வாகு உயர்ந்த - தோள்கள் உயரமாக உள்ள. சேய் - பால முருகன். ரத்ன வெற்பில் - இரத்தின கிரியில், பொலிந்து - விளங்கி, சிறந்து - சிறப்பைப் பெற்று. திகழ் - விளங்குகின்ற. குகன் - பால முருகன்.

31