உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44.

45,

46.

47,

இல்லாதவனாகி. மிடுக்கோடு - செருக்கோடு. இருப்பதை - தேவரீரை வணங்காமல் இருப்பதை பார்த்து - கண்டு. அவன் தன்னை - அந்தப் பிரமதேவனை வெடுக்கென - வெடுக்கு என்ற ஓசை உண்டாக, ஏ அசைநிலை. அடுக்கிய - ஒன்றன்மேல் ஒன்றாக உள்ள குட்டுகள்-தலையின் மேல் குட்டும் குட்டுகளை, அன்னோன் தலையில் - அந்தப் பிரமதேவனுடைய நான்கு தலைகளிலும், அளித்தவனே - கொடுத்தவனே. இடுக்கண் இலாத துன்பம் ஒன்றும் இல்லாத இரத்ன கிரியில் - இரத்தினகிரியில். இருப்பவனே - எழுந்தருளியுள்ள பால முருகனே.

பவம் அறும் - பிறப்பு அற்றுவிடும் பாவங்கள் போய் விடும் என்பதும் ஆம். என்று - என்று எண்ணி, உனை - தேவரீரை. பல்லோர் - பல அடியார்கள். நயந்து - விரும்பி. பணிந்தனர் - வணங்கினார்கள். ஆல் அசைநிலை. அவம் உறும் - வீணே கழியும். வாழ்க்கையில் - இந்த மனித வாழ்வில், வீண் நாளை - ஒரு பயனும் இல்லாத நாள்களை போக்கும் - கழிக்கும். அவலம் உளேன் - இழிந்த குணத்தை உடையவன் அடியேன். சிவம் உறும் - மங்கலம் பொருந்திய நின் அடி - தேவரீருடைய திருவடிகளை. சேவிக்கவைத்து - பணியும்படி அடியேனை வைத்து. திரு அருள் செய் - கருணையைப் புரிவாய். தவர் புகழ் - தவம் உடையவர்கள் புகழ்கின்ற. ரத்னகிரி - இரத்தின கிரியில், அமர் - எழுந்தருளியுள்ள, பால - பாலமுருகனே. தயாபரனே - கருணை உள்ள முருகனே.

அத்தகு - அப்படிப்பட்ட இயைபு உற்ற - உறவு மிக அதிகமாக உள்ள 'தாயிற் சிறந்த தயாவான தத்துவனே' (திருவாசகம் சிவபுராணம்), ஈறு பெறின் - இறந்து போனால், நயம் - அன்பை. பயம் - பயன் ; பிரயோசனம், புரப்பவன் - பாதுகாப்பவன். நண்ணினன் - அடைந்து வணங்கினேன்.

இனன்-சூரியன். மனம்கொள-மனமார. அன்னவர்-அந்த நவக்கிர கங்களை போற்றுதல் - துதித்தல். அறைகுவர் சொல்வார்கள். சினம் - கோபம். கோள் செயல் - நவக்கிரகங்களால் வரும் இன்பதுன்பங்கள். காண்கிலம் - நாங்கள் காணவில்லை. நாள்என் செயும் வினை தான்என் செயும்.எனை நாடிவந்த, கோள்என் செயும்கொடும் கூற்றென் செயும்கும ரேசனிரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டனையும்

சண்முகமும், தோளும், கடம்பும் எனக்குமுன்

னேவந்து தோன்றிடினே என்பது கந்தர் அலங்காரம் சேர்பவனே -எழுந்தருளியிருப்பவனே. கனம் - பெருமை. கொள் - உண்டாக,

ஊணும் - உணவையும். பூண்கிலள் - அணியவில்லை. துயில்கிலள் - உறங்கவில்லை. பொருப்பு - மலை. ஏண் - பெருமை. கண்டிலன்

34