உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52.

53.

வந்துவந்து, தாக்கும்" (கந்தர் அலங்காரம்), "அராப்புனை வேணியன் சேய்அருள் வேண்டும் அவிழ்ந்தஅன்பால் குராப்புனை தண்டையந் தாள் தொழல்வேண்டும் கொடியஐவர், பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால், இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே' (கந்தர் அலங்காரம்). உய - உய்ய உஜ்ஜீவனம் அடைய (இடைக்குறை), ஒங்கல் - மலை. மயல் அற - மாயை நீங்க. நிற்கும் - எழுந்தருளியிருக்கும். நீப மலர் - கடப்பமலர் மாலையை, அயர்வு - சோர்வு. குணசீல - உயர்ந்த பண்பையும் எளிவரும் தன்மையையும் உடையவனே. பால - பாலமுருகனே. அயில் - வேலாயுதத்தைக் கொண்ட முருகு - முருகன் , "அருங்கடி வேலன் முருகொடு வரீஇ" (மதுரைக் காஞ்சி, 611).

முருகா - முருகக் கடவுளே, குமரா - குமார சுவாமியே. இரத்தின நற் கிரி - பால முருகன் அடிமை வணங்கிடும் இரத்தினகிரியில். முன்பு நின்ற - முன்னே எழுந்தருளி நிற்கும். குருவே - சிவபெருமா னுக்குப்பிரணவோபதேசம் செய்த குருவே - ஆசிரியனே தகராலயம் என்னும் குகையில் எழுந்தருளி யிருப்பவனே. குறைவு இலா - என்றும் குறைதல் இல்லாத. நல் எழில் - நல்ல அழகை உடைய. கோலம் உளாய் - திருவுருவத்தைக் கொண்டவனே : "என்றும் அழகியாய்" என்று பிறரும் கூறுவது காண்க. மரு ஏறும் - மணம் வீசுகின்ற, நீப மலர் மாலை - கடம்ப மலரைக் கட்டிய மாலையை. பூண்டு - அணிந்து. உயர் - யாவரினும் மேலான, வானவனே - கடவுளே "வானவன்காண்” என்று சிவபெருமானை அப்பர் சுவாமிகள் பாடுவது காண்க. உரு ஏறும் - அழகிய திருவுருவத்தை உடைய, நின் அடி - உன்னுடைய பாதங்களை போற்ற - வணங்கி வாழ்த்துவதற்கு இடம் இலை - சிறிதேனும் இடம் இல்லை. உள்ளத்தில் - அடியேனுடைய மனத்தில், ஏ : ஈற்றசை.

இடம் இலை நெஞ்சில் - அடியேனுடைய மனத்தில் நின்னை எண்ண இடம் சிறிதேனும் இல்லை. அணு என்று இதனை - இந்த மனத்தை அணு என இயம்புவர் - சான்றோர்கள் கூறுவர், ஆல் : அசை நிலை. நடைமுறை - நடக்கும் நிலையை நோக்கிடின் - பார்த்தால். இம்மனம் - இந்த மனமானது. எங்கு எங்கோ - எந்த எந்த இடத்தையோ நாடுறும் - விரும்பிச் செல்லும். ஏ அசை நிலை. அடைதரும் - அடியேனிடம் அடைந்த இஃதை - இந்த மனத்தை, அடக்குவதற்கு - எங்கும் செல்லாமல் அடக்கி நிறுத்துவதற்கு. ஓர் ஆறு - ஒரு வழியை ; "பாழான இம்மணம் குவியஒரு தந்திரம் பண்ணுவ துனக்கருமையோ ?' என்று தாயமானவர் பாடலில் வருவது காண்க. அறைகுவையோ - சொல்லுவாயோ ? மிடைதரு - நெருங்கிய, சீ கொள் - சிறப்பைக் கொண்ட இரத்தின வெற்பினில் - பால முருகன் அடிமை போற்றும் பால முருகன் எழுந்தருளிய

36