பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


59.

6O.

61.

எது நிலை - உலகத்தில் எந்தப் பொருள் நிலையாக நிற்பது. எது நிலையாதன - எந்தப் பொருள்கள் நிலையாதன எது : ஒருமை பன்மை மயக்கம். என்று - என்று எண்ணும். அறிவு - அறிவை. எய்தி நின்றால் - அடைந்தால், கதுமென - விரைவில் ரத்னகிரியினில் - பால முருகன் வாழும் இரத்தின கிரியினில் எழுந்தருளியுள்ள. பாலனை - பால முருகனை. கண்டு - தரிசித்து. தொழுது - வணங்கி, இது கடன் - இது - நாம் செய்ய வேண்டிய கடமை. என - என்று எண்ணி, நிற்றல் - அந்த எண்ணத்தால் நிலையாக நின்று வாழ்தல். நற்பயன் - பிறந்ததனால் உண்டான நல்ல பயன். கானுக - இந்த உண்மையை அறிவாயாக. என்றன் நெஞ்சே - என்னுடைய மனமே. எதுவரினும் - எந்தத் துன்பம் வந்தாலும், வாட்டம் - அதனால் வாட்டத்தை அடைதல். இல்லாது - இல்லாமல். இருக்க - இருக்கும்படியாக இயலும் - முடியும். அன்று, ஏ இரண்டும் அசை நிலைகள்,

அன்றே - பழங்காலத்தில் பண்டறி சுட்டு. உனக்கு - தேவரீருக்கு. இ : குற்றியலிகரம். யான் - அடியேன். ஆள் ஆகிவிட்டேன் - தொண்டனாகி விட்டேன். அரிய குணக்குன்றே - அரிய பண்புகளில் மலை போல உயர்ந்து நிற்பவனே என்றது பால முருகனை. இரத்தின மாமலை - பெருமையை உடைய இரத்தின கிரியில். நின்ற - எழுந்தருளியுள்ள குமர - குமரக் கடவுளே. குகா - தகராலயம் என்னும் இடத்தில் வாழ்பவனே. இன்று - இப்போது, எனக்கு - அடியேனுக்கு. ஏதும் - சிறிதளவும். பயம் இல்லை - எந்த விதமான அச்சமும் இல்லை. காண்: அசைநிலை. காலன் - யமன். எய்துகினும் - உடலிலிருந்து உயிரைப் பிரித்து எடுத்துப் போக வந்தாலும். 'எய்து கினும் பயம் இலை என்று பின் முன்னாகக் கூட்டிப் பொருள் செய்க. உன்றனை - தேவரீரை, ப் : சந்தி, போற்றி - வாழ்த்தி வணங்கி, ஏ , அசை நிலை, ஒட வைப்பேன் - அந்த யமனை ஒடும்படி செய்வேன். அஃது - அவ்வாறு செய்வதற்குக் காரணம். உனது அருளே - உன்னுடைய கிருபையே.

அருளை - இறைவனுடைய கருணையை பெறுவது - அடைவது. அரிது அரிது - மிக மிக அரியது. என்பர் - என்று சொல்லுபவர்களாகிய, அவர் - அந்த மனிதர்கள். பலர்-பலராவர்; ஏ அசை நிலை. தெருள் உடையோரே அறிவில் தெளிவை உடைய சான்றோர்களோ, மிக எளிது - இறைவன் அருளைப் பெறுவது மிகவும் எளியதான காரியம். என்பர் - என்று சொல்லுவார்கள். திறம் அறியேன் - அடியேன் இந்த இயல்புகளை அறியும் இயல்பு இல்லாதவன். மருள் உடையேன் - மயக்கத்தை உடையவன். ரத்ன வெற்பினில் - பால முருகன் அடிமை தொழும் இரத்தின கிரியில். வாழும் - எழுந்தருளி யிருக்கும். மயிலவனே -

39