பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62,

63.

64.

மயில் வாகனக் கடவுளே. குருளைபோல் - பசுவின் கன்றைப் போல, என்னை - அடியேனை நீ - பால முருகனாகிய நீ. ஆண்டு கொண்டால் - ஆளாக ஏற்றுக் கொண்டால். என்ன குற்றம் உண்டு - தேவரீருக்கு என்ன குற்றம் உண்டாகும் ?

குற்றம் இலாதவர் - ஒரு குற்றமும் இல்லாத மனிதர். இவ்வுலகத்தில் - இந்தப் பூமண்டலத்தில், குறைவு - மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். குற்றம் பெற்றவரே - குற்றங்கள் உள்ளவர்களே. பலர் - பலராவார்கள். அஃதை - அந்த உண்மையை. நினைந்து - எண்ணி, பெரிதும் - மிகவும், நையாது - வருந்தாமல், உற்ற நற்சிலர் - நல்ல சீலத்தை உடைய பெரியவர்கள். உறைவு இடம் - வாழும் இடத்தை தேடி - தேடிச் சென்று அடைந்து, உயச் செய்குவாய் - உஜ்ஜீவனம் அடையும் படியாகச் செய்தருள்வாய். கற்றவர் - நல்ல நூல்களைக் கற்று உணர்ந்த பெரியவர்கள். போற்றும் - வாழ்த்தி வணங்கும். இரத்தின வெற்பு - இரத்தினகிரியில். உறை - எழுந்தருளியிருக்கும். காவலனே - பால முருகனே.

காவலனே - யாவற்றையும் பாதுகாக்கும் கடவுளே. சதி இட்டு நடக்கும் - தாள அறுதி போட்டு உலாவும். சலாபம் உடை - தோகையை உடைய, மா வலனே - குதிரையைப் போன்ற மயில் வாகனத்கதை உடையவனே. "கலபத்து ஏர் மா' என்று கந்தர் அநுபூதியில் வருவது காண்க, மெய்ஞ்ஞான வடிவாய் - உண்மையான ஞானத்தின் சொரூபமாகி. மலர்ந்தவனே - விளங்கியவனே, "நீயான ஞான விநோதம்' என்று கந்தர் அலங்காரத்தில் வருவது காண்க. பாவலர் போற்றும் - பாக்களைப் பாடுவதில் வல்லவர்கள் வாழ்த்தி வணங்கும். இரத்தின நற்கிரி - நல்ல இரத்தினகிரியின், பால் உறைவாய் - இடத்தில் எழுந்தருளியிருப்பவனே. 'கற்றவர்தொழு தேத்துசீர்க்கறை யூரிற்பாண்டிக் கொடு முடி' என்று தேவாரத்தில் வருவது இங்கே அறிதற் பாலது. நா வலம் - அடியேனுடைய நாக்கில் சொல் வளத்தை ஈந்து - கொடுத்தருளி. உனை - தேவரீரை வாழ்த்தும் - பலபுகழைச் சொல்லி வாயார வாழ்த்துகின்ற இயல்பினை - தன்மையை, நல்குவை - தந்தருள்வாயாக.

நல்குரவால் - தரித்திரத்தால். ஏ. அசை நிலை. நலிந்து - வாட்டத்தைப் பெற்று. துயர் உறும் - துயரத்தை அடையும். நன் மக்களை - நல்ல சான்றோர்களை. செல்க - போய்விடுக. என்னாமல் - என்று சொல்லி அனுப்பிவிடாமல், அரவணைத்து பாதுகாத்து, ஏ அசைநிலை. நற் சிறப்பு அளிக்க - நல்ல மேன்மைகளை எல்லாம் வழங்குவதற்கு. ஒல்லும்படி - முடியுமாறு. செய்தருள்வாய் - அடியேனைச் செய்து கிருபை பாலிப்பாய். இரத்தின ஓங்கல்

40