பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மிசை - இரத்தின கிரியின்மேல், ச் சந்தி. சொல்லும் - யாவரும் சொல்லி வணங்கும். புகழொடு - கீர்த்தியோடு. நின்று எழுந்தருளி நின்று. அருள்வோய் - கிருபை பாலிக்கும் பால முருகனே, பெரும் சோதியனே - பெரிய சோதி வடிவாக உள்ள பால முருகனே : "சோதியே சுடரே" என்ற மணிவாசகர் திருவாக்கும், "அருள்-விளக்கே அருட் சுடரே அருட்சோதிச் சிவமே' என்னும் திருவருட்டாவில் உள்ள பகுதியும் இங்கே கருதுவதற்குரியது.

65. சோதிக்க வேண்டா - அடியேனை நீ சோதனை செய்ய வேண்டாம். அடியேன் - அடியேளுகிய யான். மிக ஏழை - மிகவும் அறிவில்லாதவன். சுத்தம் இலேன் - மனம் வாக்குக் காயம் இவற்றில் தூய்மை இல்லாதவன். யாதுக்கும்-எந்த வேலைக்கும். சற்றும் - சிறிதளவாவது. பயன் படல் - பிரயோசனப்படுதல். இல்லேன் - இல்லாதவன். இனைந்து நின்றேன் - வருந்தியிருக்கிறேன். வா - என்னிடம் வா. திக்கு - கதி. நான் உனக்கு - உனக்கு நான் ஆவேன். என்று - என்று அருள் புரிந்து. அபயம் கொடு - அடைக்கலத்தைத் தந்தருள்வாய், மா மயிலோய் - குதிரையைப் போன்ற மயில் வாகனத்தை உடைய பால முருகனே மா - பெரிய என்னும், ஆம், நீதிக்கு - நியாயத்தைச் செலுத்துவதற்கு வல்லவர் - வல்ல இயல்பை உடைய சான்ருேர்கள். போற்றும் - வாழ்த்தி வணங்கும். இரத்ன நெடுங்குன்றனே - உயர்ந்த இரத்தின கிரியில் எழுந்தருளியிருக்கும் பால முருகனே.

66. குன்ருத - குறையாத செல்வமும் - செல்வம் முதலாகிய பொருள்களும். கோது இலா நெஞ்சமும் - குற்றம் இல்லாத மனமும். கூடும் நண்பர் - சேரும் நண்பர்களுடைய, பொன்ருத - என்றும் நீங்காத நட்பும் - தோழமையும். பொலிவும் - விளக்கமும், நின் - உன்னுடைய பாதத்தை - திருவடிகளை போற்றுவதும் - வாழ்த்தி வணங்குவதும். என்றேனும் - எந்த நாளிலும். எக்காலும் - எந்தத் தடவையும். நின்னை - தேவரீரை. மறவா - மறக்காத இயல்பும் - தன்மையும். அருள் - கொடுத்தருள்வாயாக. நன்று ஆனவர் - நற்குணங்கள் பொருந்திய பெரியவர்கள். புகழ் - புகழ்ந்து வணங்கும். ரத்னகிரியை - இரத்தின கிரி என்னும் திருத்தலத்தை. நயந்தவனே - விரும்பி எழுந்தருளியிருக்கும் பால முருகனே.

67. தவசியாய் - தவம் செய்பவளுக, போகுதல் - செல்லுதல். வேண்டும் - அவசியம். என்று இல்லை - என்ற நியதி இல்லை. தனி யோகமும் - தனியே இருந்து செய்யும் அஷ்டாங்க யோகமும் , தனி - ஒப்பற்ற என்றலும் ஆம். அவசியம் இல்லை - வேண்டும் என்ற கட்டாயம்இல்லை. இரத்தின நற்கிரி - நல்ல இரத்தின கிரியை. ஆளும்-ஆட்சி புரிந்து எழுந்தருளியிருக்கும். அவன்-அந்தப் பால

44