உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71,

72.

73.

அடியேனுக்குச் சொன்னார்களானால், கொள்ள அதை ஏற்றுக் கொள்வதற்குரிய திறம் குன்றி - இயல்பு இல்லாமல், காதிலான் போல - செவிடனைப் போல. குமைந்திருப்பேன் - வருந்திக்கொண்டிருப்பேன். எள் அத்தனை - எள்ளின் அளவாவது. நின் - தேவரீருடைய, அருள் தா - கருணையைத் தந்தருள்வாயாக. இரத்தின எழில் வெற்பனே - அழகை உடைய இரத்தின கிரியில் எழுந்தருளியுள்ள பால முருகனே,

வெற்பெலாம் - எல்லா மலைகளிலும் நின்று - எழுந்தருளி நின்று. அருள் செய்குவை - திருவருள் பாலிப்பாய். "குன்று தோறாடல்" என்பது முருகன் படை வீடுகளில் ஒன்று. வெற்பினர் - மலையில் வாழும் குறவர்கள். வேலனைக் கொண்டு - பூசாரியைக் கொண்டு; கையில் வேலை அடையாளமாக வைத்துக் கொண்டிருப்பதனால் பூசாரிக்கு வேலன் என்ற பெயர் வந்தது. அற்புடனே - அன்போடு. வெறி ஆட ஆட்டைப் பலி கொடுத்து வெறிக்கூத்து ஆட, அங்கே வந்து - அவ்விடத்திற்கு எழுந்தருளி வந்து. அருள் புரிவாய் - கருணை பாலிப்பவனே. சிற்பரனே - ஞானமாக உள்ள மேலானவனே; சித் - ஞானம். ரத்ன வெற்புடைப் பால - இரத்தினகிரியில் எழுந்தருளியுள்ள L目[[6) முருகனே. திகைக்கும்-மயங்கும். என்றன் - அடியேனுடைய, அற்ப மதியினை - கொஞ்சமாக உள்ள புத்தியை. போக்கி - மாற்றி. நல் ஞானம் - நல்ல ஞானத்தை. அருளுதி - வழங்கியருள்வாய்.

அருள் என்பது - கருணை என்று சொல்லப்படுவது. அன்பு ஈன் குழவி - அன்பினால் பெறப்பட்ட குழந்தை. என்று - என, ஏ அசை நிலை. உரைத்தார் - திருக்குறளில் சொன்னார் , "அருள் என்னும் அன்பீன் குழவி, பொருள் என்னும், செல்வச் செவிலியால் உண்டு" என்ற குறளை நினைந்து எழுதியது இது. பெரியார் - பெரியவராகிய, திருவள்ளுவர் - திருவள்ளுவ நாயனார். எனக்கு - அடியேனுக்கு. அன்பும் இலை - அவர் சொன்னபடி அன்பும் இல்லை. அருள் சேருமதோ - அருள் என்னைச் சேருமோ? கரு உள்ளளவும் - உடம்பு இருக்கும் வரையிலும், சுகம் அது இலாத - சுகமே இல்லாத ; அது: பகுதிப் பொருள் விகுதி. கதி - நிலையை, போக்குவாய் - மாற்றியருளுவாய். குரு என் - சிவபெருமானுக்குப் பிரணவோபதேசம் செய்த குரு என்ற புகழ் கொள் - புகழை உடைய, இரத்ன கிரி - இரத்தின கிரியில் உறை - எழுந்தருளியிருக்கும். கோழியனே - கோழிக் கொடியை உடைய பால முருகனே : "கோழிக் கொடியன்' என்று கந்தர் அலங்காரத்தில் வருவது காண்க.

கோழிக் கொடியன் - சேவலைக் கொடியாகக் கொண்ட பால முருகனுடைய, அடி பணியாமல் - பாதங்களை வணங்காமல்.

43