பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80.

81.

82.

மிகுத்த - மிகுதியாக உள்ள. புகழ் - புகழை உடைய, உறை - எழுந்தருளியிருக்கின்ற. சற்குணனே - உண்மையான

நற்பண்புகளை உடையவனே. பத்தன் - பக்தன். எனும்படி - என்று

சொல்லும்படி, வணங்கு - பணிந்திடும். அருள் - திருவருளை. பாலிப்பை - அருளுவாய் பாலித்தல் - அருளுதல் 'சிற்றம்பலம் - இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே (தேவாரம், 4 :1).

பால் என்பது மொழி - இவள் சொல்லும் வார்த்தைகள் பாலைப் போல இனிமை ஆனவை. கால் - பாதம். “பாலென் பதுமொழி பஞ்சென் பதுகால்" (கந்தர் அலங்காரம்). பதும மலர்க் கோலம் - தாமரை மலரின் அழகை உடையது. முகம் - இந்தப் பெண்ணின் முகம். என்று - என்று எண்ணி. அரிவையர் - பெண்களுடைய. காமத்தை - ஆசையை கொண்டு - மேற்கொண்டு. சீலம் பெறுவோர் - நற்பண்புகளை உடைய சான்றோர். சீலம் - எளிமையாய் இருக்கும் தன்மை பெறுவோர் - பெற்ற சான்றோர்கள், புகழ் - புகழ்ந்து வணங்கும். தேவ - தேவனே, "தேவர்கோ அறியாத தேவ தேவன்" (திருவாசகம் திருச்சதகம் 30). ஏலும்படி - இயலும் அளவில். புகழ்ந்து - உன் புகழ்களைச் சொல்லி. அவனுடைய புகழ்கள் அளவிறந்தன. எனும்படி - என்று அமைந்தபடி ஏத்துதற்கு - துதிப்பதற்கு ஒர் சொல் - ஒரு வார்த்தையை. இயம்புவை - சொல்லி அருளவாய.

இயம் பல - பல வகையான வாத்தியங்கள். முழங்கும் மிகுதியாக ஒலிக்கும். அணுகி - அடைந்து, நயம் பெற - நன்மை எனக்கு உண்டாகும்படி வணங்கி - வழிபட்டு, உயும் வகை - உஜ்ஜீவனம் அடையும் வழியை உயும் இடைக்குறை. நல்கிடுவாய் - தந்தருள்வாய். இலார் - "இல்லாத பெரியோர்கள், "பயம் இலார்” 'உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவ தியா தொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை" (அப்பர் தேவாரம், 2.1.10). போற்றும் - துதித்து வணங்கும். பண்ணவனே - கடவுளே "பண்ணவன் எண்குணன்." (சிலப்பதிகாரம், 10 188). சயம் - வெற்றியை. பெறும் - அடையும். வேல - வேலாயுதத்தை உடையவனே. ஞானத் திருவுரு - ஞானமே ஆன அழகிய வடிவம்; "நீயான ஞான விநோதம்" (கந்தர் அலங்காரம்). சார்பவனே - ஏற்றிருப்பவனே.

சார்ந்து - நின்னை அடைந்து. பணிவது - வணங்குவது. தகை - உயர்ந்த பண்பு. ஒன்று இலை - வேறு ஒன்றும் இல்லை ; உம்மை தொக்கது இலை இடைக்குறை. ஆர்ந்த சேர்ந்த தொண்டர் - பக்தர்களுடைய அடி பணிந்து - திருவடிகளை வணங்கி. அவ்வியல்பு - அவர்கள் மேற்கொண்ட அந்தப் பக்தியை ஆர - நிரம்ப, அருள் - அருள்புரிவாய். தேர்ந்த - நூல்களை ஆராய்ந்து

46