பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


83.

34.

85.

உண்மைப் பொருள் இது என்று தெரிந்து கொண்ட அறிவினர் - ஞானம் உள்ளவர்கள். போற்றும் துதித்து வணங்கும். திரு அழகை உடைய, வளங்களை உடைய, ஒர்ந்து - ஆராய்ந்து. இந்த நல் நிலை - உன்னை வணங்கும் இந்த நல்ல நிலைமையை. பெறும் - அடையும். ஆற்றை - வழியை, உரைத்து அருளே சொல்லி அருள்புரிவாயாக.

உரைத்து - உரைகல்லில் உரைத்துப் பார்த்து. பொன் மாற்றை - தங்கத்தின் மாற்றை உணர்வர் - அறிந்து கொள்பவர். வல்லவர் - அந்தக் கலையில் வல்லமை உடையவர்கள். உரைத்து - சொல்லி. பணிந்திடின் - வணங்கினால், எற்கு - அடியேனுக்கு ஒரு மாற்று - ஓர் சிறப்பு: இங்கு - இவ்விடத்தில். கரைத்த - கரையச் செய்ச் செய்த ஆடி - அபிடேகம் செய்யப் பெற்று. களிப்புறும் - மகிழ்ச்சியை அடையும். காவலனே - காக்கும் தெய்வமே. விரைக் கடம்பை - வாசனையை உடைய கடம்பமலர் மாலையை, அணி - அணிந்த தோளினாய் - தோள்களை உடைய பாலமுருகனே,

பவன் - கடவுள். எம்பிரான் - அடியவர்களாகிய எங்களுக்குத் தலைவன். விண்ணவர் - தேவர்கள். பணிவோன் - வணங்குகின்றவன் 'பவன்எம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான்' (திருவாசகம், திருச்சதகம், 9). கங்கை - கங்கை என்னும் பெரிய ஆறு, பாய் - வேகமாகப் பாய்ந்த சடையான் - சடையை உடையவன். 'விண்ணுக்கடங்காமல் வெற்புக் கடங்காமல், மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை, இடத்திலே வைத்த இறைவர் சடாம, குடத்திலே கங்கையடங் கும்" (காளமேகப் புலவர் பாடல்) என்பது இக்கருத்தை வற்புறுத்தல் காண்க. சிவன் தரு பால - சிவபெருமான் பெற்ற பால முருகனே, உறை - எழுந்தருளியிருக்கும். தேவ - கடவுளே. அருள்பவன் - அருள் புரிபவன் ஆகிய. எம்பிரான் - எம் கடவுளே பிரான் - உபகாரி என்றும் ஆம். உனை - உன்னை போற்றி - வாழ்த்தி, பணிய - வணங்க, பணித்தருள்வாய் - திருவுள்ளம் கொண்டு கட்டளையிட்டு அருள் புரிவாய். இவன் - அடியேன். எவன் - நம் அருளைப் பெற யார் ? என்று - என எண்ணி. பராமுகம் ஆய்விடின் - புறக்கணித்தால் ; அலட்சியமாக இருந்தால் 'பராமுகம் தவிர்தி" (கந்தபுராணம், வள்ளியம்மை திருமணப் படலம், 72). என் செய்வன் - அடியேன் என்ன செய்வேன் ?

செய்யவன் மேனி - திருமேனி செந்நிறமாக உள்ளவன். செய்ய வேற்கையன் - இரத்தத்தினத்தால் சிவந்த வேலாயுதத்தை ஏந்திய கையை உடையவன் ; செம்மையாக அமைந்த வேற்கையை உடையவன் எனலும் ஆம் , "செய்யன் சிவந்த ஆடையன் (206),

47