86.
"பவழத்தன்ன மேனி' (குறுந்தொகை கடவுள்-2), 'உடையும் ஒலியலும் செய்யை', 'உருவும் உருவத்தீ ஒத்தி (பரிபாடல், 19, 97-9), "குன்றி கோபம் கொடிவிடு பவளம், ஒண்கெங் காந்தள் ஒக்கும் நின்னிறம் (தொல்காப்பியம், இடைச்சொல் இயல், 42, சேனாவரையர் மேற்கொள்), "வென்றிச் செவ்வேள்' (சிலப்பதிகாரம், 25 : 25). சிறுமி வள்ளித்தையலை - சிறுபெண்ணாகிய வள்ளியம்மையை, தண் தமிழ் முறை கொண்டு - இனிய தமிழ் மொழியின் முறையை மேற்கொண்டு. தழை அன்பினால் - மிக்க காதலினால், நையல் - ஊடல். களவுப் புணர்ச்சியை - ஒருவரும் அறியாமல் கூடி இன்புறுவதை, நாடியவன் - விரும்பியவன். 'தள்ளாப் பொருள்.இயல்பிற் றண்டமிழாய் வந்திலார், கொள்ளா ; இக் குன்று பயன்' என்பதும், இனி, அன்பு ஒவ்வாத கற்புப் புவத்தலாற் சிறந்தது ; அப் புலவியாவது, தான் வாயில் வேண்டலும் வாயில் நேர்தலும் ஆகிய இவை உள்ளீடாகத் தலைவன் பரத்தமையான் வருவது, இனிப் புதியதாகத் தோள் நுகரப்பட்ட பரத்தை இல்லின்கண்ணே ஒருத்தியை நாட்காலையே (காலை நேரத்தில்) செவ்வணி அணிந்து விட்டும், பூப்பு அறிவிப்ப, அப்பண்புறு கழறலால் தலைவன் வந்து உவக்கும் புணர்ச்சியை உடைத்து. அப்புணர்ச்சிகள்தாம் தலைவிக்குப் பாங்காயினார் கேட்டு, வருத்தம் உற, பரத்தையால் தன் மனைக்கண் அலர் (பழி மொழி) தூற்றப்பட்டுள, அப்புணர்ச்சி இன்பந்தான் உண்டாவது இயல்பான் அன்றி ஊடலான் ஆயது . அதனால், இக்கற்பிற் போலத் தலைவர் நீங்குவது அறியாத களவிற் புணர்ச்சியை உடைய மகளிர் அவரொடு மாறுகொண்டு (ஊடல் கொண்டு) துணிக்கும் (வருந்தும்) குற்றம் உடையவர் அல்லர் : இப் புணர்ச்சியை வேண்டுகின்ற பொருள் இலக்கணத்தை உடைய தமிழை ஆராயாத தலைவர்கள் ஒழுக்கத்தைக் கொள்ள மாட்டார் என்ற அதன் உரையும் இக்கருத்தை வலியுறுத்தும்.
கொய்மலர் கொண்டு - கொய்த மலர்களைக் கொண்டு கீழே விழுந்த மலரை எடுத்துக் கொள்ளாமல் மரத்தில் உள்ள மலர்களைக் கொய்தார்கள் என்றபடி அடியார் - பக்தர்கள். துதி - தோத்திரம் செய்து வணங்கும். குன்றவனே - இரத்தினகிரியில் எழுந்தருளி இருப்பவனே.
குன்றாத - குறையாத அன்பும் - பக்தியும். கொடுமை செய்யாத குணமும் - பிறருக்குத் தீங்கு செய்யாத நல்ல குணங்களையும், மயல் - காம மயக்கத்தை ஒன்றாத - அடையாத உள்ளமும் - மனமும். உன்பால் - நின்னிடம், அமையும் - பொருந்தும். நின்றே - நிலையாக நின்று ஏ அசைநிலை தந்து - கொடுத்து.
48