87.
38.
நிலைபெறச் செய் - அந்தக் குணங்கள் அடியேனிடம் நிலையாக நிற்கும்படி அருள்புரிய வேண்டும். குன்றாப் புகழ் - மறையாத புகழையுடைய, உறை - எழுந்தருளியிருக்கும் ; நின்மல - மலம் அற்றவனே. பூரணனனே - எங்கும் நிறைந்தவனே : "பார்க்கும்இடம் எங்கும்ஒரு நீக்கமற நிற்கின்ற பரிபூர ணானந்தமே (தாயுமானவர் பாடல்).
பூரணம் ஆன பொருள் நீ - குறைவற்ற பரிபூர்ணமான பரவஸ்து நீ என - என்று, அறி புத்தி - அறியும் அறிவை புத்தி என்பது அகக்கரணங்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கினுள் ஒன்று நல்லது இது, கெட்டது இது என்று தெளிந்து அறிவது புத்தி, தந்தே - கொடுத்து, ஏ அசைநிலை. ஏர் - அழகு, அளவும் - பொருந்தும். பண்பு - நல்ல குணங்களை தந்தருள் - கொடுத்து அருள்புரிவாய். அன்றி - அல்லாமல், கதி - திக்கு : "கதிக்குவழி காட்டுகின்ற கண்ணே (திருஅருட்பா). காரணனே - எல்லாப் பொருளும் உண்டாவதற்குக் காரணமாக உள்ளவனே. கருணாகரனே - கருணைக்கு இருப்பிடம் ஆனவனே கருணையைச் செய்பவனே என்பதும் ஆம். கல் - மலை. ஆரணம் எல்லாம் - நான்கு வேதங்களும்.
அடைந்த - போர் செய்ய வந்த, வெம் சூரன்தனக்கும் - கொடிய குணங்களை உடைய சூரபத்மனுக்கும். அருள் தந்தவனை - அருளைக் கொடுத்த பால முருகனை ; “என்பால் நண்ணினான் அமருக் கென்கை அருள்என நாட்ட வாமே" (கந்தபுராணம், சூரபத்மன் வதைப் படலம், 141). எழில் - அழகு. மிடைந்து - மிகுதியாக அமைந்து. உயர் - உயர்வைப் பெற்ற, ஊர்தியாய் - மயில்வாகனத்தை உடையவனே. ஓங்கும் - உயர எடுக்கும். கொடியாய் - கோழிக் கொடியாக விளங்க வைத்தாய் - விளங்கும்படி செய்தாய் ; அக்கணம் எம்பிரான்றன் அருளினால் உணர்வு சான்ற, குக்குட உருவை நோக்கிக் கடிதின்நீ கொடியே ஆகி, மிக்குயர் நமது தேரின் மேவினை ஆர்த்தி என்னத், தக்கதே பணி யீதன்ன எழுந்தது தமித்து விண்மேல்", "செந்நிறம் கெழீஇய சுட்டுச் சேவலாய்க் கொடிஒன் றாகி, முன்னுறு மனத்திற் செல்லும் முரண்தரு தடந்தேர் மீப்போய், இந்நிலை வரைப்பின் அண்டம் இடிபட உருமே றுட்க, வன்னியும் வெருவ ஆர்த்து மற்றவண் உற்ற தன்றே", "சீர்திகழ் குமர மூர்த்தி செறிவிழி கொண்ட தொல்லை, ஊர்தியின் இருக்கை நீங்கி உணர்வு கொண் டொழுகு கின்ற, ஆர்திகழ் மஞ்ஞை ஏறிச் சுமக்குதி எம்மை என்னப், பார்திசை வானம் முற்றும் பரிஎன நடாத்த லுற்றான்" (கந்தபுராணம், சூரபன்மன் வதைப் படலம் 497-9) என்பவற்றைக் காண்க.
49