உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89.

90.

9i.

அடைந்திடும் - சோர்வடையும். நாயேனை - நாய் போன்ற அடியேனை நாய் ஒரு முறை உண்டு கக்கியதை மீண்டும் உண்ணும், அதைப்போல ஒருமுறை தீயதென்று விலக்கியதை மீண்டும் மேற்கொள்ளும் இயல்பு பற்றி ஆன்றோர்கள் பலர் தம்மை நாயேன் என்று சொல்லிக் கொள்வார்கள்: "நாயேனையும்இங்கொரு பொருளாக நயந்துவந்து, நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்" (அபிராமி அந்தாதி). உத்தமன் ஆக்க - உத்தம குணங்களை உடையவனாகச் செய்ய, தயை புரிவாய் - கருணை செய்வாய். உடைந்திடும் - சலனம் அடையும். உள்ளம் இலார் - உள்ளம் இல்லாத பக்தர்கள். போற்றும் - துதித்து வணங்கும். ஓங்கலனே - இரத்தினகிரியில் எழுந்தருளியிருப்பவனே.

ஓங்கும் - எங்கும் பரவியிருக்கும். புகழினால் - பல வகையான புகழ்களால் என் வரும் - என்ன பயன் உண்டாகும்? உணர்வதின்றி - இதை அறிந்து கொள்ளாமல், தாங்கும் - ஏற்றுக் கொண்ட பதவியால் - உத்தியோகத்தினால், ஒர் பயன் - ஒரு பிரயோசனம். தகை - அழகு சிறந்த குணங்களும் ஆம். பாங்கு - இயல்பு. உடையாய் - உடைய பால முருகனே, உடை - உடைய, தேவ - கடவுளே, பரம்பரனே - மேலானவர்களுக்கும் மேலானவனே முழுகுமுற் கடவுளே எனலும் ஆம். நீங்ககில் - முடிவு காணாத என்றும் நீங்காத என்றும் ஆம், சுத்த நின்மலனே - பரிசுத்தம் உள்ளவனும் மலம் அற்றவனும் ஆகிய பாலமுருகனே.

மலம் மூன்றில் - ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்று மலங்களில், சிக்கி - அகப்பட்டு. அறிவு அழிந்து - மெய்ப்பொருளை அறியும் அறிவை இழந்து, எள்ளும் - பிறர் இகழ்வதற்குக் காரணமாகிய, மதி - அறிவை. உடையேன் - உடையவன் அடியேன். தலம் ஒன்று - புனிதத் தலமாக நிலை பெற்ற கிரி - இரத்தினகிரியில். உறை - எழுந்தருளியிருக்கும். பாலக - பாலமுருகனே, சற்குணனே - நிலையாக நிற்கும் நல்ல பண்புகளை உடையவனே. நலம் ஊன்று பண்பு கொண்டு - நன்மை நிலையாக நிற்கும் குணத்தை மேற்கொண்டு. பணியும் - வணங்கும். நலம் - நல்ல இயல்பை, தருவாய் - கொடுத்தருள்வாய். கிலம் இல்லவர் - சீவன் முக்தர் ; கிலம் - அழிவு. வேலவ - வேலாயுதத்தை உடைய பால முருகனே. மேலவ - எல்லாரிலும் மேலானவனே. கேண்மையனே - அடியார்களிடத்தில் அருள் உள்ளவனே.

கேட்டு ஆறும் தேறகில்லாதவன் - பல நூல்களைக் கேட்டும் யாரும், இவன் இத்தகையவன் என்று தெளியமுடியாதவன். கேளார் - பகைவர்களுடைய, கிறி-மாயம் : "கேட்டாயோ தோழி கிறிசெய்த

50