உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93,

வாறொருவன்" (திருவாசகம், 8:6). வேட்டார்க்கு - விரும்பிப் பணிந்தவர்களுக்கு, நல்லவன் - நல்லவனாக இருப்பவன். வேண்டுவ - விரும்பும் பொருள்களை ஈந்து - கொடுத்து, ‘'வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட முழுவதும் தருவோய்நீ (திருவாசகம், குழைத்த பத்து, 6). விரும்பி - என்னிடத்தில் விருப்பத்தைக் கொண்டு. அருள் தேட்டை - அருளாகிய செல்வத்தை , தெளிவு என்றும் ஆம் அளிப்பவன் - கொடுத்தருள்பவன். உறை - எழுந்தருளும். தேவன் - கடவுள். ஒட்டைக் குடம் ஆம் ஒன்பது ஒட்டை உள்ள குடம்போல் இருக்கின்ற ஒன்பது ஒட்டைகளாவன : கண்கள், நாசித் துவாரங்கள், காதுகள், வாய், மலத்துவாரம், சலத்துவாரம் என்பன. உடம்புள் - என்னுடைய உடம்புக்குள் புகுந்து - நுழைந்து, எனை - அடியேனை. உய்விப்பன் - உஜ்ஜீவனம் அடையச் செய்வான் , “உள்ளே புகுந்த விச்சை, மால்.அமுதப் பெருங்கடலே, (திருவாசகம், திருச்சதகம்:26).

2. உய்யும் வண்ணத்தை உஜ்ஜீவனம் அடையும் முறையை,

அறிகிலேன் - அறியும் ஆற்றல் இல்லாமல் அடியேன் இருக்கிறேன். தொண்டர் உறையும் இடம் - பக்தர்கள் வாழும் இடங்களை எய்தி - அடைந்து. பணிந்து - அவர்களை வணங்கி , "உனதருள் மாறா, உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்" (திருப்புகழ், 7). போற்றும் - துதித்து வணங்கும். இயல் - தன்மையை, கற்றிலேன் - அடியேன் அறிந்து கொள்ளவில்லை. பொலியும் - விளங்கும். பேர் - திருநாமத்தை உடைய. வையும்படி - பிறர் என்னை நிந்திக்கும்படி, வையாமல் - வைக்காமல். வழுத்த - புகழ்ந்து வனங்க. வை - வைப்பாயாக.

வழுத்தி - துதித்து, வணங்கி - பணிந்து. அருட்டெயலால் - தேவரீருடைய அருள் ஆகிய மழையால், நனை - நனையும். மாண்பு -பெருமை. பழுத்த மனத்தினர் - கனிந்த மனமுடைய பக்தர்கள்; "பழுத்த மனத்தடியர்" (திருவாசகம், 24:4), நல் அருள் - நன்மைகள் எல்லாம் தரும் திருவருளை பற்றி நின்றார் - பெற்று வாழ்ந்தார்கள். அழுக்கு-மும்மலம், மனத்தினன் - மனத்தை உடைய அடியேன், 'யான்பாவியேன், புழுக்கனுடைப் புன்குரம்பை பொல்லாக் கல்வி ஞானம் இலா, அழுக்கு மனத் தடியேன் உடையாய்நின் அடைக்கலமே" (திருவாசகம், அடைக்கலப்பத்து, 1). பாசச் சுழியில்

பற்று என்னும் சுழிக்குள். அழுந்துகின்றேன் - உள்ளே புகுந்து

வெளிவர மாட்டாமல் மேலும் மேலும் அழுந்திக் கொண்டே

இருக்கிறேன். இழுக்கு இலார் - குற்றம் இல்லாத அடியவர்கள்.

போற்றும் - துதித்து வணங்கும். இறையவனே - கடவுளே

51