பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97.

98.

பெற்ற சேயவனே - மகனே. ஏவல் - வேலைக்காரர்கள். இடம் - வேலை செய்வதற்கு ஏற்ற இடம். பொருள் - செல்வம் , இம் மூன்றையும் சேர்த்துச் சொல்லுதல் உலக வழக்கு, இலாத - இல்லாத, ஏழையின்பால் - அறிவு இல்லாத அடியேனிடம் , 'ஏமுற் றவரினும் ஏழை" (திருக்குறள், 873). வல் - விரைவில். மாசு ஒன்று - குற்றம் ஏதேனும், நிலவறுமோ - உண்டாகுமோ ? பண்ணவன் - கடவுள்.

பரம் ஆனவனே - பரம்பொருள் ஆக இருப்பவனே. பரப்பு ஆணவனே எல்லா உலகங்களிலும் பரந்து விளங்கும் தன்மையை உடையவனே "பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூர னனந்தமே (தாயுமானவர் பாடல்). விண்ணவர் - தேவர்கள். ஏத்தி - துதித்து, பதவியை - நிலையை, வேட்டு - விரும்பி. நிற்கும் - நிற்பதற்குக் காரணமாகிய, கண்ணவனே - கண்னைப் போன்றவனே. பால - பாலமுருகனே, கணங்கள் - தேவர் கூட்டமும் பக்தர்கள் கூட்டமும். புகழ் - துதிக்கும். எண்ணவனே - எண்ணாக உள்ளவனே. எழுத்து ஆனவனே - எழுத்தின் வடிவாக இருப்பவனே. 'எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும்" (பழம்பாடல்). இறையவனே - கடவுளே. -

இறை அளவேனும் - அற்பமாகவேனும் , இறை - அற்பம் : "இறையும் ஞானம்இல் லாதனன் புன்கவி' (கம்பராமாயணம், சிறப்புப் பாயிரம், 10). நிறைதரும் - நிறைவாக உள்ள, ஆசு - குற்றம். அன்றி - அல்லாமல், குறை அற - என் குறைகள் எல்லாம் நீங்க. செல்குவன் - போவேன். ரத்தினக் கோவெற்பினாய் - மேன்மையை உடைய இரத்தினகிரி என்னும் மேலான மலையில் எழுந்தருளியிருப்பவனே. நறை - தேன். கடப்பந்தாரினாய் - கடம்பமலர் மாலையை மார்பில் அணிந்தவனே. நாயகனே - கடவுளே.

நாய் அனையேன் - நான் நாயைப் போன்றவன். எச்சில் - பிறர்

உண்டுவிட்ட இலையில் உள்ள எச்சிலை பெரியவர்கள் வெறுத்த பொருள்களை என்றபடி, நச்சி - விரும்பி. இனி - இனிமேல், நன்மை - உன் அருளைப் பெறும் தகுதி. அனையாய் - ஒப்பவனே, அருள் பால முருகா - அருளை உடைய பால முருகனே, தனி - ஒப்பற்ற இரத்ன மாய கிரி - இரத்தின கிரி. அலல் - துன்பங்களை, இடைக்குறை. களைவாய் - போக்கியருள்வாய்,

போய பிழைகள் - இதற்குமுன் யான் செய்த குற்றங்களை ; 'போய பிழையும் புகுதருவான் நின்றனவும்" (திருப்பாவை). புங்கவனே - கடவுளே (பிங்கலநிகண்டு).

53