பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


104.

1 O5.

108.

நினைத்தொறும் காண்தொறும் பேசும்தொறும் எப்பொழுதும். அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியும், குளிப்புடை யானுக்கே சென்று தாய் கோத்தும் பீ" (திருவாசகம், திருக்கோத்தும்பி, 3) என்பதை அடியொற்றியது. எனைத்துணையேனும் - எவ்வளவாவது, ஏழை - அறிவில்லாதவன். என்செய்குவேன் - என்ன செய்வேன். அனைத் துணையாம் - தாயைப் போன்ற பால - பால முருகனே.

நிறம் - தன்மையை, 'உன்நிறம் அறிந்தேன். (மணிமேகலை 4:36). எய்திடும் - அடையும். ஆறு - வழியை தெருளும் - தெளிவு பெறும். திறம் - இயல்பு. இலேன் - இல்லாதவன். உடை - உடைய திரு அழகு. செல்வமும் ஆம், உருளும் - உருண்டுவரும், "நின்கோயிலின் வாசல், அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும், படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே (பெருமாள் திருமொழி, 9) என்பது இதனோடு ஒரு புடை ஒத்திருத்தல் காண்க. இருளும் மனம் இலார் - அஞ்ஞானத்தை உடைய மனம் இல்லாத சான்றோர் : 'உலகம் இருள்நீங்க இருந்த எந்தை." (சீவகசிந்தாமணி, 2812) போற்றிய - துதித்து வணங்கிய தேவ - கடவுளே. இறையவனே - தலைவனே. எங்கும்நிறைந்தவனே எனலும் ஆம்.

திண்ணிதின் - உறுதியாக, நற்குகன் - நல்ல கருணையை உடைய முருகப் பெருமான். திருவடி - அழகிய திருவடிகளில். வீழ்ந்து - சாஷ்டாங்கமாக விழுந்து. எழுந்து - பிறகு எழுந்திருந்து. பணிந்து - மீட்டும் வணங்கி, தண்ணிய - குளிர்ந்த நலம் பெறும் - நன்மைகளைப் பெறுகின்ற. அன்பர்க்கு - தன்னுடைய பக்தர்களுக்கு. நல் அருள் - நல்ல கருணையை அளித்திடுவான் - வழங்குவான். பண்ணிய - நாம் செய்த பாவங்கள் - தீய வினைகளால் வந்த பாவங்களை. போக்கிடு வான் - தீர்த்தருள்புரிவான். பலர் பால் - சான்றோர்கள் பாலிடத்தில். அன்பினை - அன்பை. எண்ணுற அடையும்படி செய்குவன் - திருவருள் புரிவான். ரத்னகிரியுறை - இரத்தின மலையில் எழுந்தருளியிருக்கும். இறையவனே - பால முருகனே. ஏ : ஈறறசை.

வாழி - வாழ்க வாழிய என்பது ஈறு குறைந்தது என்று எழுதுவர், நச்சினார்க்கினியர். இனிது - மனமகிழ்ச்சியோடு, பணிந்து - வணங்கி, உறை - வாழும். தொண்டர் - பக்தர்கள். நல் அறம் - நல்ல தர்மங்கள் யாவும். நல்லோர் - சான்றோர். நிறைவுற

55