இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மனநிறைவு பெற்று. குறைவு அற - குறைவு இல்லாமல், கொழும் திருவோடு - வளமான செல்வத்தோடு. திரு - அழகுமாம். குறைவு அற - குறைதல் இல்லாமல். "திருமகள்" என்று முதல் பாட்டில் தொடங்கி, "திருவோடு" என்று முடித்ததை மண்டலித்தல் என்பர்.
பயன்
எம்மான் - எம்பெருமான், சுவாமி, "எந்தையே எம்மானே என்றென்றேங்கி" (தாயுமானவர் பாடல்). விரித்த- விரிவாகச் சொன்ன. சற்றே - சிறிது. விளம்பி - சொல்லி, தரித்திட்ட - அணிந்த இந்த நூல் - இந்த அந்தாதி என்னும் பிரபந்தம். ஒதுவார் - படுபவர்கள். எல்லாரும் - யாவரும். பந்தம் - பாசம். அற-நீங்க. நிற்க - நிலையாக நிலவுக - பரிந்து - அன்பு கொண்டு.
முற்றும்.
56