பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் ஜகத்குரு சங்கராசாரிய ஸ்வாமிகள்

அருளுரை

காஞ்சீபுரம், 24.4.1984

ஞானமே வடிவமாக உள்ள பரமேசுவரன் கருணையே வடிவமாக உள்ள அன்னை பரதேவதை பர்வதராஜ புத்திரியான பார்வதி தேவி இவர்களின் புதல்வனாய் ஞானப்பழமாய் விளங்கும் முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு உதவியாக நமது ப்ரிய சிஷ்யர் வாகீச கலாநிதி ரீ கி.வா. ஜெகநாதன் அவர்களால் 'இரத்னகிரி அருள்திரு பாலமுருகன் அந்தாதி' என்ற நூலைப் பாலமுருகனடிமை ரத்னகிரி சுவாமிகள் அவர்களால் வெளியிட இருப்பதை அறிந்து சந்தோஷப்படுகிறோம்.

சுப்ரமணிய சுவாமியின் பெருமைகளை விளக்கும் ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்ட தத்வங்கள் அனைத்தும் இந்த அந்தாதி 106 பாக்களில் ரத்னச் சுருக்கமாகவும், தெளிவாகவும் கம்பீரமாகவும் அமைந்துள்ளன. மலைமகளின் மகனானபடியால் எங்கும் மலையின் மேல் இருந்து அருள் பாலித்து வரும் முருகப்பெருமான் தந்தைக்கும் ப்ரனவோபதேசம் செய்த காரணத்தால், 'தகப்பன்ஸ்வாமி” என்ற புகழுடன் விளங்குபவரைத் தமிழ் மக்கள் தமிழ்க்கடவுள் என்று அன்புடனும் பக்தியுடனும் போற்றுகின்றனர்.முருகனை வழிபடுவதால் முருகனின் தந்தையான பரமேசுவரன், தாயான பார்வதி தேவி இருவர்களையும் வழிபடுவதால் ஏற்படும், ஞானம், கடாக்ஷம், இரண்டும் ஒரே இடத்தில் கிடைப்பதற்கு ஸாதனமாக அமைந்த இந்த அந்தாதி நூலின் மூலமாக முருகனை வழிபட்டு மக்கள் அனைவரும் ஸகல மங்களங்களையும் அடைந்து பரம சேஷமமாக வாழட்டும் என்று ஆசிர்வதிக்கிறோம்.

நாராயண ஸ்மிருதி.