உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலமுருகனடிமை அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் இரத்தினகிரி, கீழ்மின்னல் - 632 517

இரத்தினகிரி வட ஆற்காடு மாவட்டம், தமிழ்நாடு

அணிந்துரை

அன்புடையீர்,

அருளாசி.

இரத்தினகிரி மாமலையில் திருக்கோயில் கொண்டு திகழும் எம்பிரான் பாலமுருகன் இந்த அடிமைக்கு ஆசி வழங்கி இன்றைக்கு பதினறு ஆண்டுகளாகின்றன.

'என்கடன் பணிசெய்து கிடப்பதே' என்ற குறிக்கோளுடன், கற்பூரத்திற்கும் கதியற்றுக் கிடந்த இந்த சிறு கோயிலைப் பெருங்கோயிலாக்கப் பலப்பல திருப்பணிகளைப் பக்தர்கள் காணிக்கை கொண்டு செய்து வருகிறேன். எல்லாம் அவன் திருவருள் ஆக்ஞை.

கல் கொண்டு திருப்பணி செய்துவரும் இந்த அடிமை, கரையாத கற்கண்டனைய சொல் கொண்டு திருப்பணி செய்தால், அது இறவாத புகழெய்துமே என்றெண்ணிப் பல நாட்கள் சிந்தித்ததன் பயன், இந்த 'இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி' எவரைக் கொண்டு இப்பணியினை நிறைவு செய்வது என்று யோசிக்கும் காலை, எந்தை அருளாளன், 'இவரைக் கொண்டு செய்' என்பது போல வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதனுரை எனது நினைவில் தேயாத நிறைமதியாய்த் தோன்றச் செய்தான்.

தமிழ்த் தாத்தா, மகாமகோபாத்தியாய உ. வே. சுவாமி நாதையருடைய மாணவர் நமது வாகீச கலாநிதி கி. வா. ஜகந்நாதனர். நீண்ட நெடுங்காலமாக ஒரு தரும பத்தினியின் மெட்டிச் சத்தம்போல விளங்கிவரும், 'கலைமகள்' எனும் திங்கள் இதழின் ஆசிரியர் இவர். 'காந்தமலை' என்று தமது இல்லத்துக்குப் பெயர் தந்து கந்தனை உபாசிக்கும் சிந்தனைச் சிற்பி இவர்.