பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


இடைவிடாத படைப்புதான் உயிர், எல்லை காண முடியாத நிலைக்கு அது தன்னையும் மீறிய வளர்ச்சியை அடையும்போது உண்மையை உணர்த்துகிறது.

-ஆ

குளத்தில் படிந்திருக்கும் நீல நிறம் போல, பெண்ணே உனது எளிமை உனது உண்மையின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.

-ப.ப

என் நண்பனின் உதடுகளிலிந்து புன்னகையைப் புல்லாங்குழல் திகழவிடுகிறது; அதை என் வாழ்க்கை முழுவதுமாகப் பரப்பிவிடுகிறது.

-க.கொ

வாழ்க்கை என்கிற தடமில்லா கடலிலுடே எங்களை வழி நடத்திச் செல்லும் வடமீன் ஒளி நீயே.

-ஈ

ஞாயிறு மேற்கில் மறையும் போது, காலை நேரமாகிய அவனது கிழக்கு அமைதியாக அவன் எதிரே நிற்கிறது.

-ப.ப

கனியாகப் பழுப்பதற்கு முன் எனது ஆசையாகிற மலர் மண்ணில் உதிர்வதில்லை.

-சி

வரலாற்றுப் புழுதியில் மறைந்து விடாமல் கணக்கிட முடியாத காலம் என்கிற கமுக்கத்தில் என்றும் வாழ்கிறது குழந்தை.

-மின்