பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

103


அன்பின் குறிக்கோள் துயரமோ, மகிழ்ச்சியோ அன்று அன்பு மட்டுமே.

-நா

கடலின் அருகிலுள்ள தோட்டத்திற்குள் புகுந்திடும் இலைகளே கோடை காலத்தின் வருகையை அறிவிக்கின்றன.

-கா.ப

என் நண்பனே, காலைப் பொழுதில் தனித்திருக்கும் குன்றின் பனியடர்ந்த மலைக்கோட்டையைப் போன்று கிழக்கிலிருந்து வெளிப்படும் கதிர் உதயத்தின் ஒளியாக கமழ்கிறது உனது பரந்துபட்ட நெஞ்சம்.

-ப.ப

வாழ்க்கையின் சிறப்பே அதை உதறித் தள்ளுவதில் உனக்கு அது அளிக்கும் ஆற்றலில்தான் உள்ளது. ஏனெனில் நிலைப்பேற்றின் நுழைவாயில்தான் இறப்பு.

-ஆ

ஞாயிற்றிடம் தனக்குள்ள காதலை மழலை மொழியில் மல்லிகைக் கொடி தெரிவிப்பது அதனுடைய மலர்கள் மூலமாகவே.

-மின்

தங்கத் திரை நெய்யத் தறியில் ஓயாமலோடும் சின்னஞ்சிறு நூனாழிகளைப் போல், விண்மணியின் பொற் கதிர்கள் சிற்றலைகளின்மேல் நடனம் புரியும்.

-ப.ப