பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


என் பிறவிகள் யாவற்றிலுமே ஒரேவொரு முறை தான் இப்படியொரு மாலைப் பொழுதை நுகர்த்திருக்கிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது.

-ஈ

நெருப்பிலிருந்து நெருப்பு பற்றிக்கொள்வதைப் போல, காதலிலிருந்து காதல் பற்றிக் கொள்கிறது. சரி, ஆனால் முதல் பொறி எங்கிருந்து தோன்றியது.

-நா

விட்டுக் கொடுத்து கொண்டிருப்பதே வாழ்க்கையின் உண்மை. இதன் முழுமையே வாழ்க்கையின் முழுமையும்.

- ஆ

தனது ஓய்வைத் தன் இசையிலேயே காண்கிறது வாழ்வியக்கம்.

-ப.ப

இறையன்பன் அளிக்கும் பரிசுகளினாலே நமது வாழ்க்கை நிரம்புகிறது.

-ஆ

தன் சிறப்பின் கொடுமுடியில் மாந்தன் இருக்கும் பொழுது, அவன் தன்னுணர்வு இல்லாமலிருக்கிறான்.