பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

9கானகத்தில் அலைந்து திரியும் பறவையாகிற எனது நெஞ்சம் விண்ணாகிய உன் கண்களைக் கண்டு விட்டது. தனித்து நிற்கிற அந்த விண்ணை நோக்கி நான் மேலும் மேலும் உயரே செல்வேனாக. - -தோட்

****

ளவற்றது. தனது எல்லை என்பதை என்று மாந்தன் உணர்கிறானோ, என்று அவன் தெய்வீக நிலையை அடைகி றானோ, அந்த இறை உணர்வே அவனுள் உறைகிற படைப்பாளி. - ஆ

****

சை களைப்புற்றிருக்கும் அந்தக் கங்குலில் கடலின் முணு முணுப்பு விண்ணை நிறைக்கிறது. அன்பு வழிபாடாக உருவெடுப்பதும் அந்த நேரத்தில் தான். - எ

****

ல்லையற்ற வானகம் மேலே அசைவற்று இருக்கிறது. முடிவற்ற உலகங்களின் கடற்கரையிலே கூச்சலிட்டுக் கொண்டும் மகிழ்ச்சிக் கூத்தாடிக் கொண்டும் குழந்தைகள் கூடுகின்றன. - வ.பி

****

ன் நெஞ்சத்தை நீ வருடி விடுகிறாய், அதன் ஆழ் பொருளை உணர்த்திட என் தனிமைக்கு நிழலளிக்கிறது இன்புற்றிருக்கும் விண்ணகம். - ஆ

****