பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்ரே வரலாறு தான் உள்ளது. மாந்தனுடைய வரலாறே அது. தேசிய வரலாறுகள் யாவும் பெரிய நூலின் பகுதிகளே.

-தே

கைகளோடு கைகள் இணைகின்றன, கண்கள் மேல் கண்கள் பதிகின்றன. நம் நெஞ்சங்களைப்பற்றிய பதிவு இங்குத்தான் தொடங்குகிறது.

-தோ

விண்ணைப் படைத்த இறைவன் தானே மண்ணையும் படைத்தான்?

-க.கொ

ரவில் பொழியும் மழைபோல், அவளுடைய ஆர்வம் ததும்பும் முகம் என் கனவுகளை வட்டமிடுகிறது.

- ப.ப.

டக்கம் உலகை ஆண்டிடும் என்கிற உண்மைக்கேற்ப அழகின் இசை நம் உள்ளத்தைத் தொடுகிறது.

-சா

ரு பொருளின் பல்வேறு அங்கங்களுக்கு ஒரு முழுமையின் சமநிலைமை அளிக்கும் இணக்கம்தான் உண்மை என்பது.

-தே