பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

119



கொள்ளாமலிருக்கும்போது, சுவர்களே அயன்மைப்பட்டுப் போகிற சிறையில்தான் மாந்தன் வாழ்கிறான்.

- சா

நேற்றைய அன்பினால் புறக்கணிக்கப்பட்ட கூட்டில் எனது இன்றைய அன்பிற்குப் புகலிடம் கிடைப்பதில்லை.

-மின்

காலத்தின் தொடக்கத்திலிருந்து முடிவுரை உனக்கும், எனக்குமிடையே காதல் உள்ளது. இந்தப் பழைய காதலை யார்தான் அணைத்திட முடியும்.

- க.பா

மைநிலத்தின் துடிப்புள்ள குரல் போல், பயன் மரங்கள் என் பலகணியை நெருங்கி வருகின்றன.

-ப.ப.

நிழல்களுக்கிடையே நடந்து செல்லும் காற்றின் கண்ணுக்குப் புலப்படாத உருவமொன்றை நீலவானில் உணர முடியாத தொடுதலை நிறுத்திவிட்டு,நீ எனக்குப் பிடிகொடாமல் மறைந்து விட்டாய்.

-மின்

தான் படைத்த காலை வேளைகளே இறைவனுக்குப் புதிய வியப்புகளாகப்படுகின்றன.

-ப.ப.

தோட்டத்தில் நாணி நிற்கின்ற நிழல்களே