பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

123



மதாயிருக்கிற ஏதாவதொன்றைக் காண்பது எந்த ஒன்றையும் புரிந்து கொண்டதற்கு அடையாளம்.

一சா

சிந்தனையிலாழ்ந்திருக்கும் முடிவற்ற காலத்தில் நெற்றியில் புலப்படும் தெய்வீகத் துயரச் சாயலின் தோற்றத்தை முகில் மூட்டம் கொண்ட வானம் இன்று கொண்டுள்ளது.

-மின்

லகமளாவிய உள்ளுயிரின் வாழ்க்கையின் தாளத்துடன் கூடிய துடிப்பை எப்பொழுது மாந்தன் தனது உள்ளுயிரிலே உணர்கிறானோ, அப்பொழுதுதான் அவன் விடுதலை பெற்றவனாகிறான்.

一சா

டி ஞாயிற்றின் ஒளி வீசப் பெற்று மண்ணகம் இரவில் பறிப்பதற்கேற்ற நிலையிலுள்ள பழுத்த பழம்போல் காணப்படுகிறது.

-மின்

செம்பொருள் தன்னை உலகிற்குத் தந்து கொண்டிருக்கிறது. என்னையே நான் கண்டு உணரும் கவிதை போல அதை நான் எனக்குரியதாக்கிக் கொள்கிறேன்.

-ஆ