பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

11


மனக் கனவுகள் தங்களின் கூடுகளைக் கட்டிக் கொள்கின்றன. - மின்

****

ன்னை நெருங்கி நெருங்கி அவன் வருவதை நான் உணர்கிறேன்; என் நெஞ்சம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது. - அஞ்

****

தல் பரிசு நாணமடைகிறது, தன் பெயரை அது சொல்வதேயில்லை, புழுதியுனூடே மகிழ்ச்சி அதிர்வைப் பரப்பியவாறே நிழலின் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்துதிரிகிறது- - கா.ப

****

பாதையே இல்லா வானத்திலே சூறைக்காற்று அலைந்து திரிகிறது; சுவடு தெரியாதக் கடலிலே கப்பல்கள் மோதியுடைகின்றன. காலன் உலா வருகிறான்; குழந்தைகள் விளையாடுகின்றன. - ச.பி

****

சும்புல் தரையிலிருந்து கிளர்த்தெழும் மலர் கண்ணுக்கு எத்தனை அருகில் உள்ளதோ, அதைப் போன்றே அவள் என் நெஞ்சத்தின் அருகில் இருக்கிறான். - கா.ப

****

காணிக்கைகள் கொண்டு இறைவனை நெருங்கும்