பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இறைமொழி வேட்கை

ன்னை ஏற்றுக் கொள்வாய் இறைவா, சற்று நேரத்திற்காகவாவது.

நீ இல்லாமல் அனாதையாய் கழிந்துவிட்ட அந்த நாள்கள் மறக்கப்படட்டும்.

இந்தச் சிறு கணத்தை உனது ஒளியினால் அரவணைத்து உனது மடியிற் இறுத்திப் பரப்பிடுவாயாக.

என்னைத் தன்பால் கவர்ந்திழுத்த ஆனால் எங்குமே இட்டுச் செல்லாத குரல்களைத் தேடி நான் அலைந்து திரிந்ததுண்டு.

இனி அமைதியாயிருந்து பேசாமல் உன் ஆன்மாவில் உறையும் உன் மொழிகளைக் கேட்பேனாகுக.

一எ

பாழ்நிலைத்து பறவையாகிற என் நெஞ்சம், உன் கண்களில்தன் விண்ணைக் காண்கிறது.

காலை நேரத்தின் தொட்டில் அவை: விண்மீன்களின் ஆட்சிப் பரப்பும் அவை.

அவற்றின் ஆழத்தில் எனது பாடல்கள் தொலைந்து போயின.

விண்ணின் மேல் அதன் ஆழ்ந்த தன்மையில் நான் உயரே பறக்கட்டும்.

முகில்களைக் கீறிக் கதிரவன் ஒளியில் என் இறக்கைகளைப் பரப்பட்டும்.

-தோ