பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

131


மலர்களை மேலே உயர்த்தி விளையாடிடும் நீரூற்று எங்கே உள்ளது?

-ப.ப.

தனது தனிப்பட்டக் கருத்தை அனைவரும் ஏற்று மகிழ்ச்சியடையச் செய்கிற பாவலனே உண்மைப் பாவலன்.

-சா

இரவே, பகலாகிற வெறுமைக் கிண்ணியை நான் உன்னிடம் கொணர்கிறேன், புதியதொரு காலை விழாவிற்கு அடிகோலும் வகையில் எனது இருட்டினால் அதைத் தூய்மை செய்திடுவாய்.

-மின்

எனது நெஞ்சத்தின் தனிமையில் பனியையும் மழையையும் முகத்திரையாக அணிந்துள்ள கைம் பெண்ணின் பெருமூச்சை உணர்கிறேன்.

-ப.ப.

உன் வாழ்வைக் கொண்டு அன்பு விளக்கை ஏற்றிச் செல்.

-மின்

மலையிலுள்ள தேவதாரு மரம் தன் இலைகளின் சலசலப்பின் ஓசையை அமைதி வழிப்பாட்டுப் பாடல்களாக மாற்ற ஈடுபடும் போராட்டங்களின் நிலையை இசைக்கிறது.

-மின்