பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


காரணத்தினால் நமது உள்ளத்தின் மகிழ்ச்சியும் விடுதலையில் தான் அடங்கியிருக்கிறது.

-ஆ

மருட்கையான உலகிலிருந்து ஒரு செய்தியுடன் அது வந்தது. துயரம் பெருமூச்சுடன் படிஞாயிற்றின் மேல் விளிம்பில் அமர்ந்து கொள்கிறது.

- க.வே

புடவியின் முழுச் சுமையும் கூட எனது தனித் தன்மையை நசுக்கி விட முடியாது.

-சா

முறைமைகளால் கட்டுப்பட்டபொருள் தன்னுடன் காணும் இணக்கமே அழகு. உரிமையுடன் செயல்படும் மனங்களின் இணக்கமே அன்பு.

-ஆ

பகலில் தென்படாது ஆனால் உணரப்படுபவனுக் காகவே இந்தத் தேடுதல்.

-ப.ப

மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், உலகின் மனப்போக்கின் ஆளுமைக்குத் தனிப்பட்ட நமது தன்மை தலை வணங்கவேண்டும்.

-சா