பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

137


அமைதியின் குரல் என் சொற்களைத் தொடும் போது, நான் அவனைத் தெரிந்து கொள்கிறேன்; அப்படியே என்னையும் அறிந்து கொள்கிறேன். -மின்

நமது இயல்பை அழித்து விடுவதன்று சமயத்தின் நோக்கம்; மாறாக அதை வளர்ப்பதே அதன் நோக்கம். -சா

எனது குறைகளை நன்கு தெரிந்திருந்தும் என்னை விரும்புபவர்களுக்கே எனது கடைசி வணக்கங்கள். -மின்

மற்றவர்களின் கைகளிலிருந்து நான் ஏதொன்றையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் இறைவனிடமிருந்து அனைத்தையும் ஏற்று கொள்வேன். -கோ

புல்லின் துணைகொண்டு யாவற்றையும் உவந்தேற்க இந்த மாநிலம் தன்னை அணியமாகக் கொள்கிறது. -ப.ப

மனிதனிடம் நேய உணர்வு இருக்கும்போது, எவ்வாறு பழுத்த பழத்தை மற்றவர்களுக்கு அளிக்கும் போது மரம் மகிழ்ச்சியுறுகிறதோ, அதே போன்று கொடுப்பது என்பது மனிதனுக்கு மகிழ்ச்சியளிக்கும் செயலாகிறது. -சா