உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


நேயத்தின் பரிசு கொடுத்து விடக் கூடிய ஒன்றன்று. ஏற்றுக் கொள்ளப்படும் வரை அது காத்துக் கிடக்க வேண்டும். -மின்

செயல்படாமலிருப்பதற்கான உரிமையன்று நமது உண்மையான உரிமை செயல்படுவதற்கான உரிமையை அது குறிப்பிடுகிறது. -சா

நேயத்தில்தான் நான் வாழ்ந்துள்ளேன்,வெறும் காலத்திலன்று. -மின்

வாய்மையற்றவை யாவற்றினின்றும் என்னைக் காப்பாற்றிவிடு. வாய்மை மட்டுமே என் வாழ்க்கையில் தன் ஒளியைச் சிந்தட்டும். -கோ

என் வீட்டினெதிரே விரிந்து பரந்துள்ள அரச வீதி என் நெஞ்சத்தில் ஓர் உள்ளார்வத்தைத் தூண்டுகிறது. -எ

முழுமையாக உன்னை இறைவனிடம் ஒப்படைத்து விடு. அவனை உனது ஒரே துணையாக வைத்துக் கொள். -கோ