பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

139


கடுமையான வரைமுறைகளுக்கு உட்பட்டே அழகான பாடல் உருப் பெறுகிறது. ஆயினும் அவை யாவற்றையும் மீறவே செய்கின்றது. -சா

என்னைப் பொறுத்தவரை, இறைவன் ஒருவரே வழி பாட்டுக்குரியவர்; வேறு எவருமில்லை. -க.பா

என் உள்ளுயிரின் துயரமே மணமகளின் முகத்திரை இரவில் அகற்றப்படுவதற்காக அது காத்திருக்கிறது. -ப.ப

காலையில் கண்விழிப்பது போன்றும், இலைகளிலிருந்து பனித்துளி வடிவதைப் போன்றும், எனது பாடல் எளிமையாக இருக்கட்டும். -எ

நல்லவற்றைத் தேர்ந்தெடுக்க உன் வலிமை அத்தனையையும் ஒன்று திரட்டி மகிழ்ச்சியுடன் முன்னேறு. -கோ

பிறப்பு, வாழ்வு, இறப்பு ஆகிய நீரோடையின் மேல் மிதந்து கொண்டும் மறந்து கொண்டும் இழுக்கப்பட்டு வருபவையுமான மற்ற காலகட்டங்களை எண்ணிப்பார்க்கிறேன், மண்ணிலிருந்து மறைந்து போகும் உரிமையை உணர்ந்திருக்கிறேன். -ப.ப