பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


உலகத்தின் உள்ளமான கடைப் பகுதியில் இறப்பற்று, இளமை நிமிர்ந்து நிற்கிறது. இறப்பும், வீழ்ச்சியும் அதன் (இளமை) முகத்தில் தர்ற்காலிகமான நிழல்களைப் பரப்பிவிட்டு மேலே செல்கின்றன. -சா

மலரைப் போன்று, தன் செழுமையிலிருந்து ஒன்றிரண்டு இதழ்களை உதிர்த்து விட்டுத் தனது இழப்புகளைப் பெரிதாக எண்ணாமலிருக்கும் மலரைப் போன்று இளமைப் பகுதியில் நான் இருந்து வந்தேன். -க.கெப

நமது உலகின் கிழிந்து போன அதே பழைய நாளே மீண்டும் மீண்டும் ஒவ்வொரு காலைப் பொழுதிலும் பிறப்பெடுக்கிறது. -சா

கோடை விழா புதிது புதிதாக அரும்பும் மலர்களுக்கு மட்டும் தானா; வாடி வதங்கிக் களையிழந்திருக்கும் மலர்களுக்கு இல்லையா? -க.கொ

வானில் ஏதோவொரு மூலையில் மிக அடக்கமாக நின்றிருக்கிறது முகில். காலைப் பொழுது ஒளி வழங்கி மணிமகுடம் சூட்டுகிறது. -ப.ப

ஆளுமையின் சிறப்பை நாம் அடையவேண்டு-