பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

143


பழைய மரத்தைச் சுற்றிப் பாசி படர்வதைப் போல் பெயர் தெரியாத நாள்களின் தொடுகை என் நெஞ்சத்துடன் ஒட்டி உற்வாடுகிறது. -ப.ப

நமது வாழ்வு கரைகளோடு மோதும் ஆறு போன்றது. கரைகளுக்கெதிராகப் போரிடும் நோக்கம்தான் ஒரு கட்டுக்குள் சிறைப்பட்டுள்ளோம் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அன்று; கடலைச் சேர்ந்தடைவதற்கான பாதை என்றுமே திறந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு கணமும் உணர்ந்தறிவதற்காகவே. –சா

என்றும் நிலைத்திருக்கும் இளமையைத் தேடிக் செல்கிறேன் நான் - என் வாழ்க்கையுடன் ஒத்துவராத, என் சிரிப்பைப் போன்று அத்தனை எளிதாக இல்லாத ஒவ்வொன்றையும் தூக்கியெறிந்துவிடுகிறேன். -க.கொ

நமது ஆன்மிகச் செயற்பாட்டில் பெற்ற பயன், பகிர்ந்தளித்த பக்குவம் எல்லாமே ஒன்றுதான். -ஆ

தான் என்கிற நமது நிலை அடக்கத்திலும் அன்பிலும் தலை வணங்கி நிற்க வேண்டும். பெரியதும் சிறியதும் இடத்தில் நிலை பெற வேண்டும். -சா