பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


விண்ணின் ஆசை அத்தனையையும் உள்ளடக்கியது எனது சிறகுகள். -க.கொ

நாம் இணைந்த அதிகாலை விடியல் நம் நெஞ்சங்களைத் தாண்டி அமைதியில் வழிந்தோடுகிறது. -ஈ

ன் உடன் பயணியே, நான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் உன்னை ஒவ்வொரு கணமும் கூடுவதற்கே. -க.கொ

ன் தாயின் பல்வேறு செயல்கள் பற்றியெல்லாம் குழந்தைக்குத் தெரியாது. அதற்குத் தெரிந்ததெல்லாம் அவள் தன் தாய் என்பது ஒன்றே. -ஆ

னது உள்ளத்தில், உன் அன்புக்குரியள் என்ற இடம் எனக்குண்டு; உன் உலகத்திலோ, உனது பட்டத்தரசி என்ற நிலைப்பாடு உண்டு. -ஈ

வெளிப் பார்வைக்கு, இயற்கை அமைதியற்றதாகவும், எப்பொழுதும் துடிப்புள்ளதாகவும் தோற்ற மளிக்கிறது. உள்முக நோக்கில் அது அமைதியாகவே இருக்கிறது. -ஈ