பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.அன்பிற்குக் காத்திருத்தல்


மாலை நேரம் என்னை அழைக்கிறது. கொந்தளிக்கும் கடலில் இருளைக் கிழித்துக் கொண்டு செல்லும் கடைசிப் படகில் அமர்ந்திருக்கிற பயணிகளை மகிழ்ச்சியுடன் பின் தொடர்ந்து செல்வேன்.

அவர்களில் சிலர் வீடு நோக்கி திரும்புகிறவர்கள்; வேறு சிலர் நெடுந்தூரத்தில் தென்படும் கரையை நோக்கிச் செல்பவர்கள். ஆயினும் அனைவருமே கடலில் செல்லத் துணிந்து விட்டவர்கள்.

வீட்டை விட்டுக் கிளம்பிப், படகையும் தவறவிட்ட நானோ தனிமையில் கரையோரம் அமர்ந்திருக்கிறேன்.

தோல்விகளை வாரியெடுத்துக் கொண்டு, பகல் விடியும் பொழுது பலனளிப்பதற்காக இருளில் கண்ணீரும் கம்பலையுமாக இருளில் ஊன்றுவதற்காகச் செல்லும் அந்த அன்பிற்காகக் காத்திருக்கிறேன்.