இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
147
உலகத்தில் சிறந்தவற்றில் என் பங்கு உன் மூலமாகவே எனக்குக் கிடைக்கப் போகிறதென்பதை நான் அறிவேன். -க.கொ
★★★★
அடிவானம் அத்தனையையும் திறந்து வைக்கிறது ஓர் உண்மை. எல்லையற்ற பரப்புக்கு அது நம்மை வழிநடத்திச் செல்கிறது. -சா
★★★★
தன்னில் ஒரு பகுதியை காதலன் காதலியிடம் தேடுகிறான். -சா
★★★★
தனித்து நிற்கும் பனிப் பகுதியிலிருந்து வெளியேறும் பறவைகளைப்போல், உனது பாடல்கள் இன்பமான சித்திரை மாதத்தில் தங்களுடைய கூடுகளை என் நெஞ்சத்தில் கட்டிடத் துடிக்கின்றன. மகிழ்ச்சியான அந்த வருங்காலத்திற்காக நான் காத்துதிருக்கிறேன். -க.கொ
★★★★
ஒளியிழந்து கொண்டிருக்கும் பகல் பொழுதை இரவு முத்தமிட்டு அதன் காதுகளில் கிசுகிசுக்கிறது : "நான்தான் சாக்காடு உனது தாய், உனக்கு புதுப்பிறவி அளிக்க வேண்டியவன் நான்!” -ப.ப
★★★★