பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

151


ஊதாரித்தனமான வெளிப்பாடாக உனது அன்பை ஆக்கிவிடாதே. உண்மை இருக்கட்டும் அதில். ஏனெனில் உண்மை எளிமையாக இருக்க முடியும். -ஈ

மழைக்கால இந்த மாலைப் பொழுதில், காற்று அமைதியற்று இருக்கிறது.

அசைந்தாடும் மரக்கிளைகளைக் கவனிக்கிறேன்; அனைத்துப் பொருள்களின் உயர்வையும் எண்ணிப் பார்க்கிறேன். -ப.ப

எல்லாவற்றிற்கும் மேல் நெஞ்சத்தில் நான் எண்ணி மகிழ்வதொன்று உண்டு. இவ்வுலகில் எல்லையற்ற காலம் என்னை வாழவைக்கப் போகும் அன்பைப் பற்றிய எண்ணம் தான் அது. -க.பா

உலகின் வளங்கள் யாவற்றையும் பயன்படுத்தி விட வேண்டும் என்பதிலேயே நம் எண்ணம் முழுவதும் ஒன்றி விடுகிற நிலையில், உண்மையான மதிப்பை அது இழந்து விடுகிறது. -சா

மாந்தனின் அளவற்ற மதிப்பை நமது ஆன்மிக ஆசான்கள் அனைவரும் அழுத்தமாகவே அறிவித்திருக்கிறார்கள். -ஆ