பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்நாம் அறிந்து கொள்ள வேண்டியவற்றிலிருந்து நம்மைத் தனித்து நிறுத்துகிறது அறிவு. ஒருமித்து வாழ்வ திலிருந்து தனது குறிக்கோளை எட்டுகிறது அன்பு. -சா

குடும்பம் சார்ந்த நிலை, வாழ்க்கையின் இதர அலுவல்கள் என்று எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சரி உலகம் என்பது பெண்களின் உலகம் மட்டும்தான். -ஆ

மாலைப் பொழுதின் நிழல்கள் அழுத்தமாகவும், ஆழமாகவும் விழுகின்றன.

மேற்கு முகத்திற்கு உன் சாரளத்தைத் திறந்து அன்புக் கடலின் ஆழத்தில் ஆழ்ந்து போ. -க.பா

கடல்ச் சுற்றி சுழல்வது இங்கே. நாம் அடைய வேண்டிய மறு கரையும் இங்கே தான் - ஆம், நின்று நிலைத்திருக்கும் நிகழ்காலம், தூரத்தில் உள்ள எதுவுமில்லை- உள்ளது. -சா

மலரிதழின் முனையில் படிந்திருக்கும் பனித்துளி போல், உன் கண் இமைகளில் மகிழ்ச்சி தரும் நாணம் படிந்துள்ளது. -ஈ