பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


தன் வாழ்வு எப்பொழுது முழுமை பெறுகிறது என்பது பற்றி மனிதன் உணர வேண்டும். எல்லையற்ற பரப்பில் தன் நிலைமை உண்ர வேண்டும். - -சா


பொருளற்ற சொற்களின் தூசி உன்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

அமைதியில் உன் உள்ளுயிரைத் தூய்மைப் படுத்திவிடு. - -ப.ப


நடப்பவை யாவற்றையும் உண்மையாக்குவது நிலைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மெய்மை ஒன்றே. - -சா

மெல்லிதாக ஒளி சிந்தும் இலைகளுடன் என் எண்ணங்களும் மங்கிய ஒளி வீசுகின்றன; இந்த ஒளி படுவதால் என் நெஞ்சம் இசை பாடுகிறது; வான வெளியின் நீல நிறத்தினுடே காலத்தின் இருண்மைக்குள் அனைத்துப் பொருள்களுடன் மிதந்து கொண்டிருப்பதில் என் வாழ்க்கை மகிழ்ச்சியடைகிறது. - -ப.ப


அழியாவரம் பெற்ற தான், தனது ஆன்மாவைக் கண்டறிய முன்பின் தெரியாத இலக்கை நோக்கி மாந்தன் மேற் கொள்ளும் பயணத்தின் வரலாறுதான் மாந்தனின் வரலாறு. - -சா