பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

159


விண்ணின் முகத்தை இவ் உலகிற்குக் கொண்டு வந்த சிறப்புப் பெற்ற கள்ளங்படமற்ற இந்த வெள்ளை உள்ளத்தை, மாசு மறுவற்ற இந்தச் சின்னஞ்சிறு உயிரை, வாழ்த்துவாயாக! - வ.பி


நம்மிடம் புதைந்துள்ள எல்லையற்றதாகிற மகிழ்ச்சியே நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. - சா

ஒரு புன்னகையுடன் என்னை வரவேற்கிறது செங்கதிர் வெளிச்சம்.

அதன் சேர்ந்த உடன் பிறந்தாளான மழையோ என் நெஞ்சத்தினிடம் பேசுகிறது. - ப.ப

அவனைக் கூடுவேன் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன். - க.பா

பகலில் பூத்த எனது மலர் மறக்கப்படும் தன் எழில் இதழ்களை உதிர்க்கிறது.

மாலை நேரத்தில் அது நினைவாகிற பொன் மயமான கனியாகப் பழுக்கிறது. - ப.ப