உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

161


விடுதலை செய்

எனது காதலியே! உனது, இனிமைப் பிணிப்புகளினின்று என்னை செய்வாயாக! முத்தங்களைத் திணறும்படி பொழிகின்றவெறி ஒழிய வேண்டும்!

இந்தக் கடுமையான திணறும் காதல் மணம் என் நெஞ்சத்தையே அடைக்கிறதே!

கதவைத் திறந்து, காலைக்கதிரவனின் ஒளி வெள்ளம் உள்ளே வர இடம் கொடு.

காதல்வெறியிலே உன்னைத்தழுவி நிற்கும் நான் உன்னுள்ளே மூழ்கிக்கிடக்கிறேனே!

உனது காந்தத் தழுவலினின்று என்னை விடுதலை செய்; மீண்டும் எனக்கு ஆண்மை தந்து, நான் உனக்கு முழு உரிமையான நெஞ்சத்தை வழங்கும்படி துணை செய்வாயாக!

-கா.ப