பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


உனது வாக்கு இரவின் முகத்திரையைக் கிழித்து விட்டுள்ளது; காலைப் பொழுதின் அரும்புகள் திறந்திருக்கின்றன.

-எ

ஓ, இரவே, என்னை உனது பாவலனாக ஏற்றுக் கொள்.

உனது நிழலின் கீழ்க் காலம் காலமாகப் பேச்சு மூச்சற்றவர்களாகச் சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய பாடல்களை நான் பாட விடு.

-க.கொ

நல்லவற்றைச் செய்து வருவதிலேயே ஈடுபட்டிருக்கும் அவனுக்கு நல்லவனாகயிருப்பதற்கு நேரம் இருப்பதில்லை.

-ப.ப

என்றாவது ஒரு நாள் என்னுள்ளே இடம் பெற்றுள்ள உயிரை என்னுள்ளே ஒளிந்திருக்கிற அந்த மகிழ்ச்சியை எதிர்கொள்ளவே செய்வேன்.

-க.கொ

மழையற்றிருக்கிற இலையுதிர் கால வெண்முகில் நான். நெற்கதிர் முற்றியிருக்கிற வயலில் என் முழுமையைக் காண்பாய்.

-ப.ப